ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - மகரம்

ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025  - மகரம்

புத்துணர்ச்சியும், புதுபொலிவுடன் விளங்கும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து குரு பார்வை இடுவது சிறப்பான பலனை பெற்று தரும். கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களுக்கு ஏதாவது ரூபத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். சிறப்பான வளமாக வாழ்க்கை சூழ்நிலை அமையும்.
 
உங்களின் யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பது உங்களுக்கு இம்மாதம் நல்ல பலனை பெற்று தரும். குறிப்பாக கலைதுறையினரும் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். நேரத்தை வீணடிக்காமல் சிறந்த நற்பலனைகளை பிறருக்கு செய்வதை தொண்டாக கருதி அவர்களுக்கு உதவி செய்வீர்கள். காரணமில்லாத காரியங்களை செய்யமாட்டீர்கள். சமூதாய வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு சிறப்பாக அமையும். வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் போல் ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்துவீர்கள்.
 
விரைய ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் தொழில் இதுவரை பட்ட எண்ணற்ற கஷ்டங்கள் விலகி, நன்மை பெறுவீர்கள். குல தெய்வ வழிபாடுகளை செய்வீர்கள். சிலருக்கு திருமண வைபவங்களில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக கருதி செயல்படுவீர்கள். சகோதரரின் வழியில் சில காரியம் நடக்கும். கொடுத்த சில இடங்களில் வராமல் இருந்த பணம் சிறிது சிறிதாக வரபெறுவீர்கள். பொது வாழ்வில் உங்களுக்கு தனிபட்ட மரியாதையும், பாராட்டுதலும் கிடைக்கும். பொருளாதார நிலையில் தன்னிறைவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிலை உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், வெண்மை, பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, ஞாயிறு, வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
26-07-2025 சனி மாலை 06.14 மணி முதல் 28-07-2025 திங்கள் இரவு 02.29 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து துளசி மாலையும், நெய் தீபமும் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் உங்களின் அனைத்து வித பிரச்சனையும் தீரும்.