ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - கன்னி

வாழ்க்கை வாழ்வதற்கே என உணர்ந்து செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்தும் தொழில் ஸ்தானத்தில் குருவுடன் சூரியன் அமர்ந்து இருப்பது உங்களின் தொழிலில் வளம் பெற்று விளங்குவீர்கள். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள்.
இம்மாதம் உங்களின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுதந்திரமான முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் சாதிக்க வேண்டுமென்ற அடிப்படையில் அமைத்துக் கொள்வீர்கள். சுமையாக இருக்க நினைக்க மாட்டீர்கள். புதிய கோணத்தில் அனைத்தையும் பார்ப்பீர்கள். குறைகளை களைந்து நிறைவை அடைவீர்கள். உங்களின் நுணுக்கமான செயல் பெரும் பலமாக அமையும். அரசியலிலும் தனித்துவமாக செயல்படுவது அவசியமாகும். உங்களை சார்ந்தவர்களை வளர்த்துவிட எண்ணுவீர்கள்.
இம்மாதம் உங்களுக்கு குறுகிய செலவுகள் உண்டாகும். வீடு மராமத்து பார்த்தல், வெளியூர் சென்று வருதல் போன்ற வகையில் செலவீனம் வரும். கலைத் துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வி ஞானம் சிறப்பாக அமையும். உங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள் உங்களின் அன்பை பெற தேடி வரும் காலமாக அமையும். புதிய முயற்சிகளை சில காலம் தள்ளி போடுவது நல்லது. நீங்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்கும் போது நல்லதாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
18-07-2025 வெள்ளி அதிகாலை 03.28 முதல் 20-07-2025 ஞாயிறு அதிகாலை 05.47 வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும், செவ்வாய் கிழமை சுப்ரமணியர் வழிபாடு செய்வதும் சிறப்பு. உங்களின் அன்புக்குரியவர்களின் எண்ணமும் உங்களின் எண்ணமும் இணைந்து சகல காரியமும் சித்தியாகும்.