ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - கடகம்

ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025  - கடகம்

காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து யோகாதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருப்பதும் லாப ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமைவதும் நற்பலன்களை பெற்று தரும்.கிடைக்க இருப்பது கிடைப்பதும் உங்களுக்கு வாய்ப்பாக அமையும்.
 
அட்டம ஸ்தானத்தின் ராகுவுடன் சனியும் இணைவு பெற்று இருப்பது பல காரிய தடைகளை தந்தாலும் குரு பார்வையில் தடைபட்ட காரியம் சீராக நடக்க துவங்கும். இம்மாதம் 6 ஆம் திகதிக்கு பின்பு உங்களுக்கு வளர்ச்சியை பெற்று தருவார்கள். இதுவரை கொடுக்கல் வாங்கலிலும். பொருளாதார நிலையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு அதிலிருந்து மீண்டு வர வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் பிரச்சனை சீராகும். அதற்கான பணிகள் செயல்பட துவங்கும். வீரையாதிபதி புதன் ராசியில் அமர்ந்து உங்களின் செலவீனங்களை குறைத்து நன்மையை தருவார்.
 
அரசியலிலும், பொது வாழ்விலும் நீங்கள் நிலையான அந்தஸ்தை பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும். அதன் மூலம் உங்களின் வளர்ச்சியை உருவாக்கி கொள்வீர்கள். சொந்தங்கள் பிரிந்து சென்றாலும் கூட அதற்கான பின் விளைவுகளால் அனைவரும் வந்து சேருவார்கள். அதனை நினைத்து செயல்பாடுகளை குறைத்து கொள்ளாமல் எப்பொழுதும் போல செயல்பட துவங்கும் போது  தானே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். கலைத்துறையினரும் புதிய பல ஒப்பந்தங்களுக்கு வாய்ப்புகள் அமையும். குறுகிய காலத்தில் வளர்ச்சியை பெறுவீர்கள். விளையாட்டு சாதனைகளை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, ஆரஞ்சு, பலவர்ணம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்
 
திங்கள், செவ்வாய், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
13-07-2025 ஞாயிறு இரவு 08.06 மணி முதல் 15-07-2025 செவ்வாய் இரவு 12.30 மணி வரை.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு எலுமிச்சை பழம் சாதம் வைத்து மூன்று நெய் தீபம் ஏற்றி மனமுருக வேண்டிக் கொள்ள சகல தடைகளும் நீங்கி நன்மை பெறுவீர்கள்.