ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025 - தனுசு

ஜுலை மாதம் ராசி பலன்கள் 2025  - தனுசு

பொறுப்புடன் எதையும் செய்து வெற்றியை காணும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பார்வை பெறுவதும் மன வலிமைக்கும், மூன்றில் சனி ராகு அமர்ந்து குரு பார்வை பெறுவது உங்களின் வளர்ச்சிக்கும் வழி கிடைக்கும். எதை செய்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் சீராக ஆராய்ந்து செயல்படுவீர்கள். குற்றங்களையும், குறைகளையும் களைந்து அதிலிருந்து விடுபட்டு செயல்பட துவங்குவீர்கள்.
 
இனி உங்களின் ஆறாமிட அதிபதி உங்களின் விரையஸ்தானத்தை பார்ப்பதால் இதுவரை இருந்த இழப்புகள் மறைந்து, நன்மை உண்டாகும். உங்களின் யோகாதிபதி சூரியன் ராசியை ராசிநாதனுடன் இணைந்து பார்ப்பதால் நல்ல வரன் அமைவதும் சிறந்த தொழில் வாய்ப்பும், வெளிநாட்டு வேலை, துரிதமான செயல்பாடுகள் உண்டாகும். தான் படித்த கல்விக்கு தகுந்த வேலையை தேடாமல் கிடைத்த வேலைக்கு சென்று வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்த்கம் இம்மாதம் தள்ளி வைப்பது நல்லது. இதன் மூலம் இழப்பு வராமல் தடுக்க முடியும்.
 
அரசியலிலும், பொது வாழ்விலும் செயல்பட துவங்குவீர்கள். முக்கிய நிகழ்வுகளை பற்றி யோசிக்காமல் உங்களின் குறிகோளை அடையும் முயற்சிகளில் ஈடுபாடு கொள்வீர்கள். யோகாதிபதி வீட்டில் சந்திரனுடன் செவ்வாய் அமர்வதுடன் கேதும் இணைவு பெறுவதால் சூரியன் என்ன செய்வரோ அதனை கேதுவும் செய்வார். இனி எல்லாம் சிறப்பான நற்பலன்கள் தரும். கலைதுறை அன்பர்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். தனக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெறுவீர்கள். சொந்த உறவுகளின் பிரிவினை மறைந்து நன்மை பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகள் மறையும். திடமான நம்பிக்கையே உங்களை வெற்றி பெற செய்யும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், சிவப்பு, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
24-07-2025 வியாழன் பகல் 12.20 முதல் 26-07-2025 சனி மாலை 06.13 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி மிளகு கலந்த சாதம் படைத்து அதனை பக்தர்களுக்கு தானம் செய்து வேண்டிக் கொள்ள சகல நலனும் உண்டாகும்.