டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - விருச்சிகம்
நினைத்ததை நினைத்தபடி செய்ய வேண்டுமென்று நினைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் அமர்ந்து குருவை பார்ப்பது சிறப்பான நற்பலன்களை தரும் லாபாதிபதியுடன் பெறுவது தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் வியாபார யுக்திகளையும் அனுபவத்தையும் தருவார்கள்.
உங்களின் ராசியை சனி பார்ப்பது தொய்வு பெற்று தொழில் வாய்ப்புகள் இனி செயல்பட துவங்கும். மருத்துவ துறையில் பணிபுரியும் உங்களுக்கு சிறப்பான நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். பஞ்சமஸ்தானத்தில் ராகு அமர்ந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பார்கள்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முழுமையான பங்குகளை வசித்து உரிமை பெற்று தருவீர்கள். சில நேரம் உங்களின் செல்வாக்கு பலமடங்கு பெருகும். உங்களின் வளர்ச்சியை கண்டு சிலர் பொறாமை பட்டு வருவார்கள். எதற்கு கவலை படமாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் சீர்த்திஸ்தானத்தையும் உச்ச வீட்டையும் பார்ப்பதும், சுகஸ்தானத்தை பார்ப்பதும். உங்களின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும்.
பொது வாழ்வில் மக்களின் முறைகளை கேட்டு அறிந்து அதற்கு தகுந்த சேலைகளை செய்து வருவீர்கள். தேவைபடும் போது கோபபடுவீர்கள். அந்த கோபம் அர்த்த முன்னதாக இருக்கும். கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்பது போல கோபத்தை கூட சுகமான அனுபவமாக ஆக்கி கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு நல்ல வெகுமதி கிடைக்கும். சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் நல்ல வளர்ச்சியையும், பாராட்டையம் பெறுவீர்கள். சகோதரி மூலம் சில காரியம் வெற்றி கரமாக அமையும். உங்களை மதித்து நடப்பவருக்கு உங்களின் வழிகாட்டுதல் பயன் தரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டம நாட்கள்:
.15-12-2024 ஞாயிறு மாலை 04.08 மணி முதல் 17-12-2024 செவ்வாய் இரவு 09.33 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு கேது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை சாத்தி உடல் ஊனமுற்றோருக்கு அன்னதானம் இட்டு வேண்டுதலை சொல்லிவர தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.