டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மேஷம்

வீரியமும், விவேகமும் கொண்டு செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் குருவும், ராசிநாதன் சுகஸ்தானத்திலும் அமர்ந்தும் சுகஸ்தானாதிபதியான சந்திரன் ராசியை பார்ப்பதும் உங்களின் செய்யும் விளங்குவீர்கள். லாபஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று இருந்தாலும் உங்களின் ராசியை சனி பார்பையிடும் போது பல்வேறு பாதிப்புகளை அடைவீர்கள் என்றாலும் சனி நீட வீடு என்பால் கெடுபலன்கள் அதிகம் இருக்காது.
 
கல்வியிலும், அறிவாற்றலிலும் சிறந்து விளங்கும் மாணவர்களாக உருவாகுவீர்கள். ஆறாமிடத்து அதிபதி எட்டில் இருப்பதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது படி உங்களின் அன்பும் அறிவும் பன்மடங்கு பெருகும். உங்களின் பஞ்சமாதிபதியான சூரியன் எட்டாமிடத்தில் அமர்வதால் இதுவரை அரசு சார்ந்த காரியங்கள் தடைபட்ட நிலைமாறி நன்மை உண்டாகும்.
 
காலத்தின் கட்டாயமாக சில காரியமும் உங்களுக்கு சாதகமாக அமையும் இனி பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். தனஸ்தானத்தில் அமர்ந்த குரு வக்கிரகதியில் இருப்பதால் எளிமையாக பணவரவு இருக்காது. சிரமம் கொண்டு வருமானம் பார்க்கும் நிலை உண்டாகும். 
 
ராசிநாதன் செவ்வாய் சுகஸ்தானத்தில் வக்கிர பெறுவதால் உடல் வசதி சின்ன சின்ன மன கசப்புகளும் குடும்ப சச்சரவும் உண்டாகும். பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து தொழிலிலும், உத்தியோகத்திலும் நற்பலன்கள் பெற்று தருவார்.
 
அன்பு மனைவியும், அறிவு குழந்தையும் இம்மாதம் முழுவதும் சரியாக மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். தொழிலிலும் உத்தியோகத்திலும் பொது வாழ்விலும் சிறப்பாக இருப்பீர்கள். கலைதுறையினர் முன்னேற்றம் பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
.27-12-2024 வெள்ளி பகல் 02.35 முதல் 29-12-2024 ஞாயிறு இரவு 12.18 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஆரஞ்சு, வெண்மை, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
செவ்வாய், புதன், வெள்ளி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரின் வழிபாடும், நெய் தீபமும், சிவப்பு நிற மாலை அணிவித்து வேண்டிக்கொள்ள சகல காரியமும் சிக்கலின்றி சிறப்பாக நடக்கும்.