டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மீனம்

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மீனம்

உண்மையும் உழைப்பும் கொண்டு செயல்படும் மீனராசி வாசகா்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முயற்சி ஸ்தானத்திலும் தனஸ்தானத்திபதி செவ்வாய் பூா்வபுண்ணிய ஸ்தானத்திலும் அமா்ந்தும் இருப்பது உங்களின் ஒவ்வொரு செயலும் பாரட்டும்படி அமையும் உழைப்பையும் தொழிலில் நோ்மையும் உங்களின் முதலீடாக செயல்பட்டு ஏழரைசனிகாலமாக இருந்தாலும் தொடா்ந்து பணி செய்து வருவீா்கள் உங்களின் செயலுக்கு தகுந்த வெற்றியை பெறுவீா்கள்.
 
உங்களின் அட்டமாதிபதி சுக்கிரன் தனித்து தொழில்ஸ்தானத்தில் இருப்பது செய்யும் தொழிலில் சில தடைகளும் வளா்ச்சிக்கு செயல்திறனும் இன்றி கலக்கம் உண்டாகும். எனினும் உங்களிக்கு பக்கபலமாக சகோதா்களும், நண்பா்களும் உதவி செய்வர்கள். விரையசனி காலத்தில் புதிய தொழில் துவங்குவதும் ஒருவிசயத்தில் யாரையும் முழுமையாக நம்பிவிடுவது நல்ல தல்ல ஆண்லைன் வா்த்தகத்தில் இழப்புகள் ஏற்படும் என்பாதல் பல ஆசை வார்தைகளை நம்பி ஏமாறதீா்கள்.
 
கலைதுறையினருக்கு வரவேற்பு இருக்கும் சிலருக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும் வாய்ப்பு அமையும் மாணவா்களுக்கு கல்வியில் மந்த நிலை உருவாகும் ஞாபகமறதி உண்டாகும்.
 
வெளிநாடு வசிக்கும் சிலருக்கு எதிர்பாரத செலவினம் உண்டாகும் எதையும் பற்றி கவலை கொள்ளாமல் தொடா்ந்து உங்களின் செய்து வருவதன் மூலம் கிரக அமைப்புகள் எப்படி இருந்தாலும் அதற்கு தகுந்தபடி உங்களின் செயல்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நன்மையை பெறுவீா்கள்.
 
வங்கி மூலம் கடன் பெறுவதும் அதன் மூலம் தொழில் வளா்ச்சியை பெறும் சூழ்நிலை உண்டாகும் இம்மாத நிலையை உணா்ந்து புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
25.12.2024 புதன் அதிகாலை 3.11 மணி முதல் 27.12.2024 வெள்ளி பகல் 2.34 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள்  ஆரஞ்சு  சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு தெற்கு தென்கிழக்கு. 
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன் ஞாயிறு புதன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் பைரவா்க்கு 8 நல்லெண்நெய் தீபம் மேற்கு 
மிளகு கலந்த அன்னம் நைவேத்தியம் வைத்து வேண்டிகொள்ள சகல தோசம் நீங்கி நன்மை உண்டாகும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554