டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மகரம்

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - மகரம்

சாதனை படைக்க வேண்டுமென்று எண்ணி செயல்படும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இருப்பதும் தனஸ்தானத்தில் ராசிநாதன் சனி அமர்ந்து சுகஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பது உங்களின் தொழிலில் நல்ல மூன்றாமிடத்தில் ராகு அமர்ந்து செயலில் துணிச்சலையும், வெற்றியையும் அடைய செய்யும் உங்களின் யோகாதிபதி சுக்கிரன் விரையஸ்தானத்தில் அமர்ந்திருப்பது வீண் அலைச்சலையும், வெளியூரின் பயணம் செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.
 
உங்களின் ராசியில் உச்சம் பெறும் செவ்வாய் உங்களின் ராசியை பார்ப்பது மனதில் தைரியத்தையும் அசாத்தியமான துணிவையும் தரும். இதன்.மூலம் முக்கிய காரியங்களில் மிகப்பெரிய வெற்றியை பெறுவீர்கள். நல்லதை மட்டும் செய்யும் உங்களின் நல்ல குணத்திற்கு எல்லாம் சிறப்பாக அமையும்.
 
அரசியலில் புதிய நல்ல திருப்பங்களை அடைவீர்கள். எதிலும் உங்களின் செல்வாக்கு பெறுவீர்கள். நிலம் சம்மந்தமாக பல நாட்கள் தடைபட்ட நிலை மீண்டு சுபிட்சம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வெளியூர்களில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.
 
பகுத்தறிவு பேசி உங்களிடம் வாக்கு வாதம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வெல்வீர்கள். தொழிற்சங்கத்தின் முக்கிய பங்கு வசித்து வாழ்வில் தொழிலாளர்களின் மேன்மைக்கு பல நல்ல காரியங்களை செய்வீர்கள். 
 
குலதெய்வ வழிபாடு செய்து புனித தீர்த்த பாத்திரை சென்று வந்து உங்களின் ஆன்மீக சேலையை மேம்படுத்திக் கொள்வீர்கள். பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
20-12-2024 வெள்ளி அதிகாலை 05.21 முதல் 22-12-.2024 ஞாயிறு மாலை 03.35 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு மாலை சாத்தி விளக்கு எண்ணெய், நெய் கலந்த தீபமேற்றி வேண்டிக் கொள்ள எல்லா நலன்களும் சுப காரியமும் உண்டாகும்.