டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - கும்பம்
நிலையான தொழிலும் உறுதியான மனமும் கொண்ட கும்பராசி வாசகா்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமா்ந்தும் உங்களின் யோகாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் அமா்ந்தும் தனஸ்தானத்தில் ராகு அமா்வதும் குரு மறைவு ஸ்தானத்தின் பார்வை இடுவது உங்களின் ஒவ்வொரு செயலிலும் துடிப்புடனும் ஆக்க பூா்வமாகவும் இருக்கும்.
சிலரை பற்றி கவலைபடாமல் எதிர் காலத்திற்கு தகுந்தபடி நல்ல வளா்ச்சியை பெறுவீா்கள்.சிலருக்கு சின்ன சின்ன அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தொழிற்சங்கத்தின் முக்கிய முடிவுகளுக்கு உங்களின் பங்கு நனறாக இருக்கும் அரசியலலும் பொதுவாழ்விலும் உங்களின் செயல்பாடுகள் சிறபாக அமையும்.
அரசியலில் பழைய நண்பா்கள் தொடா்பு பயனுள்ளதாக அமையும் பொது காரியளின் உறுதியான முடிவுகளையும் செயல்களையும் செய்து பாரட்டுகள் பெறுவீா்கள் பெண்களுக்கு நினைத்த காரியம் விரைவில் நடக்கும் உடல் நலனின் சிறு உபாதைகள் உண்டானாலும் பாதிப்பை தராது.
தொழிலில் ஸ்தானத்தில் சூரியனுடன் அட்டமாதிபதி இனைவு பெறுவது தொழிலில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் அமையும் பொது நலனின் அக்கறையுடன் இணைந்து செயல்பட்டு எல்லோருக்கம் பயன் அளிக்கும் விதமாக செயல்படுவீா்கள்
கலைதுறையினா் முக்கிய வாய்புகளும் இணைந்து செயல்படும் சூழ்நிலையும் உண்டாகும் எடுத்த செயலை தவறாமல் செய்து நல்ல பலன் பெறுவீா்கள் முடியவெடுத்த பிறகு பின்வாங்கும் போக்கை கைவிட்டு தொடர்ந்து செயல்படுவீா்கள் குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்சியுடன் வழி நடத்தி செல்வீா்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
22.12.2024 ஞாயிறு மாலை 3.36 மணி முதல் 25.12.2024 புதன் அதிகாலை 3.10 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம் வென்மை சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு தென்கிழக்கு வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி சனி ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மிளகு 9கட்டி திரி இட்டு மனம் உருக வேண்டிகொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.