டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

தனக்கென்று ஒரு கொள்கைகளை வகுத்து செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு சனி சீர்த்தி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது எடுத்து காரியம் மேன்மை அடையவும். தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்லவும் பயனுள்ள விடயங்களை மேம்படுத்திக் கொள்ள உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். ராசிநாதன் குரு ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்ப்பது உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும்.
 
உங்களின் தொழில் தடங்கள் ஏற்பட்டாலும்கூட சுமைகளை நீங்கள் தங்கி விரைவாக செயல்படதுவங்குவீர்கள். ஓன்லைன் வர்த்தகம், வெளிநாட்டு தொழில் வழிகளில் புதிய முதலீடுகளை தற்சமயம் நிறுத்தி வைத்து கொள்வது நல்லது. பங்கு சந்தை சில காலம் பெரிய சரிவை ஏற்படுத்தும் மீறி செயல்பட்டால் பாதிப்பை தான் சந்திக்கும் நிலைவரும். 
 
அரசியலிலும், வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவத்தாலும் இனி உங்களின் வாழ்க்கை மேம்பாடு கொள்ளும். சிரமங்களை தங்கி வழிநடத்தி வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு முக்கிய நிகழ்ச்சிகளின் மூலம் ஏற்றம் பெறுவீர்கள். சாதாரண காரியங்களை கூட சவாலாக சந்தித்து மேன்மை அடைவீர்கள்.
 
உங்களின் யோகாதிபதி பனிரெண்டில் மறைவு பெறுவதால் யோக பலன்கள் சற்று தாமதமாகி மாத கடைசியில் நன்மை பெறுவீர்கள். அரசியலில் உங்களின் பங்கு நன்மையை தரும். காரணமில்லாத சில விடயங்கள் தடைபட்டு நின்றுவிடும். இம்மாதம் உங்களுக்கு சிறப்பு இல்லை என்றாலும்கூட பெரிய பாதிப்பை தராது.
 
நண்பர்களுடன் பழகும் போது பொருயோ, பணமோ கொடுத்து உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது. தோல்விக்கு கண்டு துண்டு விடாமல் வெற்றியை கண்டு மகிழ்ந்து விடாமல் எப்பொழுதும் சமமாக நினைத்து வாழ்ந்து வந்தால் உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்க பெறுவீர்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
17-12-2024 செவ்வாய் இரவு 09.34 மணி முதல் 20-12-2024 வெள்ளி அதிகாலை 05.20 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், வெண்மை, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வெள்ளி, சனி, திங்கள்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபம் ஏற்றி சிவப் பு நிற பூ வைத்து உங்கள்னி வேண்டுதலை சொல்லி விட்டு பறவை, மிருகங்களுக்கு உணவு தந்து தொடர்ந்துவர சகலமும் வெற்றியை தரும்.