சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - துலாம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - துலாம்

சிந்தனையை சிதறவிடாமல் செயலில் இறங்கும் துலா ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தில் கேதுவும், சுக ஸ்தானத்தில் சனி, சூரியன், புதன், குரு, சுக்கிரன் என ஐந்து கிரகங்களும். களத்திர ஸ்தானத்தில் செவ்வாயும், அட்டமத்தில் ராகுவும் லாபஸ்தானத்தில் சந்திரனும் அமர்வது நல்ல பலனை தரும். கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் தாமதமாகுவதும். உரிய நேரத்தில் நடக்காமல் தடைபடுவதும் இருந்தாலும், உங்களுக்கு உங்களின் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தை குரு வுடன் இணைந்து பார்வை இடுவதால் நல்ல பலனையே தருவார். பணியில் இருப்பவர்களுக்கு சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். கலை துறையினர் புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வீர்கள். திடமான நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லாம் உங்களுக்கு சரியாக நடக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:

18.02.2021 வெள்ளி காலை 09.25 முதல் 21.02.2021 ஞாயிறு இரவு 08.33 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

சித்திரை 3, 4 ஆம் பாதங்கள்:

நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை காண்பீர்கள். வித்தியாசமான அனுபவங்களை பெறுவீர்கள். வசதியுடன் வாழவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.

சுவாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

பிற மதத்தவர்களின் உதவி கிடைக்கும். வாழ்வில் எதை சாதிக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அதற்கான சந்தர்ப்பம் அமையப் பெறுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.

விசாகம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:

பல தடைகளிலிருந்து மீண்டு வருவீர்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். முக்கிய தகவல் உங்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, நீலம், ஆரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வெள்ளி, சனி, செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

வெள்ளிக்கிழமை  அம்மனுக்கு வெண் தாமரை வைத்து விளக்கு போட்டு வழிபாடு செய்து வர உங்களின் அனைத்து தடைகளும் நீங்கி வளம் பெறுவீர்கள்.