சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - சிம்மம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - சிம்மம்

துணிச்சலுடனும், மனவலிமை யுடனும் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசியில் சந்திரனும், சுகஸ்தானத்தில் கேதுவும் சத்ருஸ்தானத்தில் சனி, சூரியன், புதன், குரு, சுக்கிரனும் அமர்ந்தும் பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாயும் தொழில் ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்தும் உங்களின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி கொண்டிருப்பார்கள். சுகஸ்தான கேது உங்களின் உடல் நலனை பாதிக்க செய்தாலும், ராசிநாதன் ஆறாமிடத்தில் அமர்ந்திருப்பதால் நோய் வருவதை தடுத்து விடுவார். சனி ஆறில் அமர்வது யோகம் என்றாலும் உங்களுக்கு சாதகமான கிரகமான குரு, நீசம் பெற்று சனியுடன் சேர்ந்து நீச பங்க ராஜயோக பலனை தருவதால் உங்களின் பொருளாதார நிலையில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். புதிய திட்டங்களுக்கு பலவழிகளில் உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
14.02.2021 ஞாயிறு பகல் 11.10 முதல் 16.02.2021 செவ்வாய் இரவு 09.44 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:
 
மகம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கிடைக்க வேண்டிய பணபலன்கள் கிடைக்க பெறுவீர்கள். பாதிப்பை தந்த நிலைமாறி அதிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் கிடைக்க பெறுவீர்கள்.

பூரம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

புதிய திட்டங்கள் செயல்படதுவங்கும் எதிர்பார்த்த வளர்ச்சி மேலும் விரைவாகும். குடும்பத்தில் நல்ல காரியம் பற்றிய செய்திகள் மகிழ்ச்சி தரும். பணபுழக்கம் இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்:

விருப்பத்தின் அடிப்படையில் உங்களின் செயல்கள் சிறப்பாக அமையும். தொழிலில் கூடுதல் முன்னேற்றம் அடைவீர்கள். கிடைக்க வேண்டிய பொருட்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

சிவப்பு, வெண்மை, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, தெற்கு, தென் மேற்கு,

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபடவ ேண்டிய தெய்வங்கள்:

நவகிரக வழிபாடு செய்து சனிக்கிழமை கேதுவுக்கு தேங்காய் எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டு வர உங்களின் சகல காரியமும் அனுகூலமாக அமையும்.