சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - ரிஷபம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - ரிஷபம்

திடமான நம்பிக்கை கொண்டு விளங்கும் ரிஷப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம ராகு சுகஸ்தானத்தில் சந்திரனும் களத்திரத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனி ஐந்து கிரகங்கள் அமைத்தும் விரையஸ்தானத்தில் ஸ்தானாதிபதியே ஆட்சி பெற்று இருக் கிறார்கள். குரு பார்வை உங்களுக்கு இருப்பதும் தைரிய ஸ்தானத்தை ஐந்து கிரகங்கள் பார்ப்பதும். சனி லாப ஸ்தானத்தை பார்ப்பதும் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பக்க பலமாக இருப்பார்கள். தொழிலில் உங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். வெளி நாட்டு தடை நீங்கி விரைவில் பயணம் மேற்கொள்வீர்கள். பதவி உயர்வுகள் பணியில் இருப்பவர்களுக்கு அமையும். பொருளாதார வளம் பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
07.02.2021 ஞாயிறு மாலை 05.01 முதல் 09.02.2021 செவ்வாய்  இரவ 08.54 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:
 
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சோதனைகளை வென்று சிந்தனை செய் வீர்கள். பொது நல செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டு விளங்குவீர்கள். எதிலும் வெற்றியை பெறுவீர்கள்.

ரோகிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

அரசியல்வாதிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். வெளியூர் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.

மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்:

புதிய செயல்பாடுகளை ஊக்கப்படுத்து வீர்கள். பாதியில் நின்ற காரியம் செயல்பட துவங்கும் விரைவில் இனிப்பான செய்தி வந்து உங்களை ஊக்கப்படுத்தும். பொருளாதார நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

கருவெண்மை, நீலம், மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வெள்ளி, சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய், வெள்ளிகிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும்.