சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - மேஷம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - மேஷம்

வாழ்விற்கு தேவையானதை அறிந்து செயல்படும் மேஷ ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசி நாதன் செவ்வாய், ராசியிலும் தன ஸ்தானத்தில் ராகுவும், சுகஸ்தானத்தில் சந்திரனும் சூரியன், சுக்கிரன், புதன், குரு, சனி ஐந்து கிரகமும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பல்வேறு தொழில் வாய்ப்புகளை பெற்று வளம் பெறுவீர்கள். குறுகிய கால முதலீடுகளில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். எட்டாமிடத்தில் கேது உங்க ளுக்கு கெடுபலன்களை தரமாட்டார் எனினும் முயற்சிகளுக்கு தடை வரும். உங்களின் சொந்த விருப்பம் நிறைவேறும். ஆசைபட்ட பொருட்களை வாங்கி மகிழ் வீர்கள். பொருளாதார சூழ்நிலை மாறும்.

சந்திராஷ்டம நாட்கள்:

05.02.2021 வெள்ளி பகல் 02.21 முதல் 07.02.2021 ஞாயிறு மாலை 05.00 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

அசுபதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் கவனமுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். சாதனைகளை செய்து பாராட்டு பெறுவீர்கள். மணவாழ்க்கை சிறப்பாக அமையும்.

பரணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
கலைதுறையினருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களின் எதிர்கால நலனுக்கு இப்பொழுதே திட்டம் வகுத்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பு சிறக்கும். வரவு அதிகரிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:

அரசியலில் நினைத்தபடி வளர்ச்சியைப் பெறுவீர்கள். எதற்கு தயார் நிலையில் துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் குறையும். வருவாய் உயரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

ஆரஞ்சு, வெண்மை, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

செவ்வாய், வெள்ளி, சனி.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமை காலை 6 - 7 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.