சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - மீனம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - மீனம்

நினைத்ததை நினைத்தபடியே செயல்படுத்தும் மீன ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு தன ஸ்தானத்தில் தன ஸ்தானாதிபதியும் கீர்த்திஸ்தானத்தில் ராகுவும், சத்ருஸ்தானத்தில் சந்திரனும், பாக்கியஸ்தானத்தில் கேதுவும், லாபஸ்தானத்தில் லாபாதிபதியு டன் சூரியனும், புதனும், குருவும், சுக்கிர னும் அமர்ந்துள்ளார்கள். இனி உங்களின் முயற்சிக்கும் வெளிநாடு தொடர்புகள், கலை துறையின் வளர்ச்சிக்கும் ராகு சிறப்பான பலன்களை தருவார். தனஸ்தானத் தில் வாக்குசித்தியும், தனமும் செவ்வாய் தருவார். லாபஸ்தானத்தில் ஐந்து கிரகம் அமர்ந்து பலவழிகளில் வருமானத்தை தருவார்கள். கேதுவால் புண்ணிய தீர்த்தங் களில் நீராடும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:

03.02.2021 புதன் பகல் 12.00 முதல் 05.02.2021 வெள்ளி பகல் 02.20 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

பூரட்டாதி 4 ம் பாதம்:

புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தனவரவு நன்றாக இருக்கும். தொழில் வளம் பெற்று மேன்மை அடைவீர்கள். பணபலம் கூடும்.

உத்திரட்டாதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

உழைப்பிற்கு முக்கியத்துவம் தருவீர்கள். காலம் அறிந்து செயல்படுவீர்கள். சாதிக்க நினைத்ததை செயல்படுத்துவீர்கள். பொருளா தாரம் சிறக்கும்.

ரேவதி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சந்திக்கும் நண்பர் மூலம் புதிய தகவல்களை சேகரித்து தொழிலில் மேலும் வளம் பெறுவீர்கள். புதிய பதவி கிடைக்க பெறுவீர்கள். உறவுகள் பலப்படும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

மஞ்சள், ஆரஞ்சு, நீலம்.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனமும் தீபமிட்டு, அனுமனின் தரிசனம் செய்துவர, உங்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகி தொழிலில் மேன்மை அடைவீர்கள்.

கணித்தவர்: அருள் வாக்கு சோதிடர் திரு.ஆனந்ஜி
0091 9789341554