சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - மகரம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - மகரம்

காரியத்தில் கவனம் செலுத்தி செயல்படும் மகர ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசியில் ராசி நாதனும், சூரியன், புதன், குரு, சுக்கிரனும் சேர்ந்தும். சுகஸ்தானத்தில் சுகஸ்தானாபதிபதி ஆட்சி பெற்றும் பஞ்சம ஸ்தானத்தில் ராகுவும், அட்டம ஸ்தானத்தில் சந்திரனும், லாபஸ்தானத்தில் கேதுவும் அமர்ந்துள்ளார்கள். களத்திர ஸ்தானத்தை ஐந்து கிரகங்களும் பார்வை இடுவது வரன் அமைவதில், தீர்மானிப் பதில் தாமதமாகும். எனினும் குரு பார்வை பெறுவதால் சிக்கிரம் திருமணங்கள் நடக் கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உங்களுக்கு காரிய தடையை தந்தாலும், குரு பார்வையால் சாதகமான சூழ்நிலையே அமையும். சுகஸ்தானத்தில் செவ்வாய் அமர்வதால் உங்களின் வாகன வாங்கும் யோகம் சிறப்பாக அமையும் எதிலும் தெளிவாக செய்து நன்மையை அடைவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

26.02.2021 வெள்ளி பகல் 12.33 முதல் 28.02.2021 ஞாயிறு மாலை 05.01 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

உத்திராடம் 2, 3, 4 ஆம் பாதங்கள்:

அரசியலில் சில காலம் ஒதுங்கி இருந்த நீங்கள், இனி அதில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உயர்ந்த நோக்கங்களை செயல் படுத்துவீர்கள். காரிய சித்தி உண்டு.

திருவோணம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வளமான எதிர்கால திட்டங்களை செயல்படுத்தி காட்டுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

அவிட்டம் 1, 2 ஆம் பாதங்கள்:

சிக்கலான கால கட்டங்களை கடந்து வந்து இனி திடமான வளத்தை பெறுவீர்கள். சரியான பாதையை தேர்வு செய்து வளம் பெறுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

நீலம், மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:

தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, வியாழன், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

செவ்வாய் கிழமைகளில் வள்ளி, தெய்வயானையுடன் இருக்கும் முருகனுக்கு நெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து வேண்டுதலை சொல்லிவர உங்களின் அனைத்து செயல்களும் வெற்றியை தரும்.