சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - கும்பம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - கும்பம்

எதிலும் நேர்மையாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் கும்ப ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு முயற்சி ஸ்தானத்தில் செவ்வா யும், சுகஸ்தானத்தில் ராகுவும் களத்திரஸ்தானத்தில் சந்திரனும் தொழில் ஸ்தானத்தில் கேதுவும், விரையஸ்தா னத்தில் ராசிநாதனுடன் சூரியனும், புதனும், குருவும், சுக்கிரனும் அமர்ந்து உள்ளார்கள். மறைவு ஸ்தானத்தை குருபார்வை இடுவது. உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை தரும். மேலும் ராசிநாதனே விரையாதிபதியாக வருவதால் ஏழரை சனி பாதிப்பை தராது. வெளிநாட்டு பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும். யாருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இதனால் பாதிப்பை தரும் கவனமுடன் இருப்பது நல்லது.

சந்திராஷ்டம நாட்கள்:

01.02.2021 திங்கள் காலை 09.00 முதல் 03.02.2021 புதன் பகல் 11.59 மணி வரையும்.
28.02.2021 ஞாயிறு மாலை 05.02 முதல் 02.03.2021 செவ்வாய் இரவு 08.02 மணி வரையும்.

நட்சத்திர பலன்கள்:

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:

விளையாட்டுகளில் சாதனை செய்தாலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பாதுகாப்பு பணியில் சிலருக்கு பணி சுமைகள் உண்டாகும்.

சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சுமையாக இருந்த பணிகளில் சிலருக்கு சிரமம் குறையும். வெளிநாட்டு சம்மந்தமான செயல்கள் நல்ல பலனை தரும். பொருளாதார நிலை சீராகும்.

பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:

மனதில் இருந்த பெரிய பாரம் சீராகும். குடும்பத்தில் சச்சரவு நீங்கி அமைதி கிடைக்கும். புரியாத புதிராக இருந்தது அவிழ்ந்து வளம் பெறும்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

நீலம், வெண்மை, ஆரஞ்சு.

அதிர்ஷ்ட திசைகள்:

மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

சனி, திங்கள், செவ்வாய்.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சனி, ஞாயிறுக்கிழமைகளில் நவகிரகத்திற்கு ஐந்து மிளகு கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபத்தில் இட்டு வழிபாடு செய்து வர சகல தோசமும் நீங்கும்.