சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள் 01.02.2021 முதல் 28.02.2021 வரை - கடகம்

சார்வரி ஆண்டு பிப்ரவரி மாத ராசி பலன்கள்  01.02.2021 முதல் 28.02.2021 வரை - கடகம்

நினைத்ததை சாதிக்க துணிச்ச லுடன் செயலாற்றும் கடக ராசி வாசகர்களே!

இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் சனி. சூரியன், புதன், குரு, சுக்கிரன் அமர்ந்தும், தொழில் ஸ்தானத்தில் ஸ்தானாதிபதியே அமர்ந்தும் லாபஸ் தானத்தில் ராகும் அமர்ந்துள்ளார்கள். இம்மாதம் முழுவதும் கிரக மாற்றம் எதுவும் இல்லை. தனஸ்தானத்தில் சந்திரன் உங்களுக்கு வளங்களை அள்ளி தருவார். லாபஸ்தானத்தில் ராகு உங்களுக்கு நல்ல பலனை தருவார். ஐந்தாமிட கேது உங்க ளின் முயற்சிகளுக்கு பல தடைகளை தந்து தாமதப்படுத்துவார். செல்வம், செல்வாக்கு நற்பலன்கள் குறைவின்றி இருக்கும். உங்களின் தொழிலுக்கு பல நண்பர்கள் வந்தா லும் திடீர்செலவுகள் வந்து உங்களுக்கு தர்ம சங்கடத்தை தந்து விடும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பண புழக்கம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

11.02.2021 வியாழன் இரவு 02.48 முதல் 14.02.2021 ஞாயிறு பகல் 11.09 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:

புனர்பூசம் 4ம் பாதம்:

வங்கி மூலம் கடன் பெற வாய்ப்புகள் அமை யும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். விவ சாய பொருட்கள் விளைச்சல் நன்றாக இருக்கும். வெளிநாடு பயணம் பயனுள்ளதாக அமையும்.

பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

விரும்பிய வாழ்க்கையை தேர்வு செய்வீர்கள். தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தாலும் தெளிவு பெறுவீர்கள். மருத்துவர்களுக்கு நல்ல காலமாக அமையும்.

ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:

சரியான நேரத்தில் உங்களில் செயல்களை செய்து நற்பலன்களை பெறுவீர்கள். வரவேண்டிய தொகை விரைவில் வந்து சேரும் காலத்திற்கு தகுந்தபடிமாறிக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:

வெண்மை, மஞ்சள், சிவப்பு.

அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, வடமேற்கு, தெற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வடக்கு, வடமேற்கு, தெற்கு.

இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

வியாழக்கிழமை சித்தர்கள் தரிசனமும், வெள் ளியன்று வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகனையும் வணங்கி வர உங்களின் சகல காரியமும் சித்தியாகும்.