மகர ராசிக்கான பலன்கள்

மகர ராசிக்கான பலன்கள்

வருடத்தின் நடுப்பகுதியில் நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியும் சோதனைகளை தராத பெயர்ச்சிகளாக இருக்கும் என்பதால் 2017-ம் ஆண்டு உங்களுக்கு நன்மைகளை தரும் வருடம்தான். தற்போது எட்டாமிடத்தில் இருக்கும் ராகு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதிக்குப் பிறகு ஏழாமிடத்திற்கு மாறுவது முன்பிருந்ததைவிட நல்ல அமைப்பு என்பதால் இதுவரை தொழில் துறைகளில் ஏற்ற இறக்கங்களையும், பண கஷ்டங்களையும், பொருளாதார சிக்கல்களையும் சந்தித்து கொண்டிருந்தவர்கள் வருட பிற்பகுதியில் இருந்து அது நீங்கப் பெறுவீர்கள். குறிப்பாக இதுவரை இளையவர்களின் திருமணங்களுக்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருத்த அமைப்பு இந்த வருட பிற்பகுதியில் விலகுகிறது. மேலும் எட்டில் இருந்து பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் உங்களுக்கு விரயங்களைத் தந்து கொண்டிருந்த ராகு விலகுவதால் இனிமேல் நஷ்டங்கள் உங்களை விட்டு விலகும். செப்டம்பர் மாதம் 12 ம் தேதி நடக்க இருக்கும் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் இப்போதிருக்கும் சாதகமான ஒன்பதாமிடத்திலிருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். முன்பை விட நன்மை தருகின்ற மாறுதலாக இது இல்லாவிட்டாலும் நிச்சயம் சோதனை தருவதாக அமையாது. வருடக் கடைசியில் அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெற இருக்கும் சனிபெயர்ச்சியின் மூலம் நீங்கள் ஏழரைச்சனியின் ஆதிக்கத்தினுள் வருகிறீர்கள். சனிபகவானே உங்களின் ராசிநாதன் என்பதாலும், இந்தப் பெயர்ச்சியின் மூலம் தனக்குப் பிடித்த குருவின் வீட்டில் சனி அமர்வதாலும், கெடுதல்களைச் செய்யாமல் விரயச்சனியாக மட்டும் செயல்படுவார் என்பதால் கஷ்டங்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை. அதேநேரத்தில் இந்த வருடம் புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதிய முயற்சிகள் எதையும் செய்வது கூடாது. ஏழரைச்சனி நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் கடுமையான சிக்கல்களையும், தேவைக்கு அதிகமான உடல் உழைப்பையும் தரும் என்பதால் புதிய தொழில் துவங்குவதை இளம்பருவ குறிப்பாக நாற்பது வயதுக்குட்பட்ட மகர ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3