துலாம் ராசிக்கான பலன்கள்

துலாம் ராசிக்கான பலன்கள்

துலாம் ராசிக்காரர்களை கடந்த சில வருடங்களாக தொல்லைப் படுத்தி, வாட்டி வதைத்துக் கொண்டிருந்த ஏழரைச்சனி அமைப்பு 2017-ம் ஆண்டின் அக்டோபர் மாதம் 26 ம் தேதி விலக இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே பிறக்க இருக்கும் புத்தாண்டினை நீங்கள் வரவேற்பீர்கள்.

கடந்த சில வருடங்களாக துலாம் ராசிக்காரர்கள் அனுபவித்த வேதனைகள் மிக அதிகம். தொழில்துறையில் சிக்கல்கள், வேலையில் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், கடன் தொல்லைகள், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்காதது, வாழ்க்கையில் இன்னும் செட்டிலாகாமல் இருப்பது போன்ற அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டீர்கள். துலாம் ராசி இளையபருவத்தினர் ஏழரைச் சனியினால் அடைந்த வேதனைகளுக்கு அளவே இல்லை. பிறந்த ஜாதகவலுவுள்ள மிகச்சிலர் மட்டும்தான் கஷ்டங்கள் இல்லாமல் இருந்தீர்கள். இந்த வருடத்துடன் உங்களின் அனைத்து பிரச்சினைகளும் விலகப் போகிறது என்பது உறுதி. எவ்வித கோட்சாரக் கிரகநிலைகள் உங்களுக்கு கைகொடுக்கா விட்டாலும் ஏழரைச்சனி விலகுகிறது என்பது இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எல்லா வித தடைகளையும் நீக்குகின்ற ஒரு அமைப்பு. சனி விலகியதும் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்பது ஜோதிடவிதி. எனவே மற்ற ராகு,கேது மற்றும் குருப்பெயர்ச்சிகள் கை கொடுக்காவிட்டாலும் ஏழரைச்சனி முடியப் போவதால் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துயரங்களில் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டான 2017-ம் ஆண்டு சந்தோஷங்களை மட்டுமே தருகின்ற வருடமாக இருக்கும். அதேநேரத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கின்ற ராகு-கேது பெயர்ச்சியும் ராகுபகவான் தற்போது இருக்கின்ற சாதகமான பதினொன்றாம் இடத்தை விடுத்து பத்தாம் வீட்டிற்குப் போவதைப் போலத் தோன்றினாலும் ராகுவிற்கு பிடித்த வீடான கடகராசிக்கு போவதால் சனிப்பெயர்ச்சி போலவே ராகு-கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மைகளையே தரும் என்பது உறுதி.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!
Right Ad3