சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - துலாம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - துலாம்

வித்தியாசமாக சிந்தித்து செயல் படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு மூன் றாமிடத்தில் சனி அமர்ந்து ஐந்தாமிடம், ஒன்பதாமிடம், விரையஸ்தானத்தை பார்வை யிட்ட சனீஸ்வரர், 26.12.2020 முதல் உங்களின் ராசிக்கு நான்காமிடத்தில் அமர்ந்து அர்த் தாஸ்டம சனியாக வருவதுடன் உங்களின் ராசியையும் பார்வையிடுகிறார். சனீஸ் வரர் உங்களின் ராசியில் உச்சம் பெறுவதுடன் உங்களின் ராசிக்கு யோகாதிபதியாக இருப்பதால். துலாம் ராசிகாரர்களுக்கு பெரிய பாதிப்பை தரமாட்டார். நிலையான தொழில் வாய்ப்பையும். உறுதி யான செயல்பாடுகளை கொண்டு விளங்குவார்.
 
சூரியன் சாரத்தில் இருக்கும் போது சில சிரமங்களையும். சந்திரன் சாரத்தில் இருக்கும் போது தொழில்வளத்தையும். செவ்வாய் சாரத்தில் இருக் கும் போது மனஉறுதியும் துணிச் சலையும் தருவார். உங்களின் ராசிநாதன் ராசியில் அமரும் போதும், ராசியை சுக்கிரன் பார்க்கும் போதும் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை தருவார். அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் உங்களின் ராசிக்கு கெடுபலன்களை தர மாட்டார். இனிவரும் காலத்தில் குரு பார்வை பெறும் போது உங்களின் ராசிக்கு மேலும் நற்பலன்களை தருவதுடன் திருமண தடை குழந்தை பாக் கியம் போன்று நற்பலன்களும், வீடு கட்டும் யோகமும் உண்டாகும். ராகு / கேதுகளால் சில தடங்கல் வந்தாலும் உங்களின் ஆற்ற லாலும், சனியின் பார்வையாலும் நன்மையே பெறுவீர்கள். 
 
பணியாளர்களுக்கு இடமாற்றம் உண்டா கும். கலைதுறையினர் புதிய நடைமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகளை திறம்பட செய்து முடிப்பார்கள். மாணவர்கள் உயர்கல்வி பயில எடுக்கும் முயற்சிகள். வளம் பெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கௌரவ படுத்தபடுவீர்கள். சம்மந்தமில்லாத விடயங்களில் தலையீடுவதை தவிர்ப்பது நல்லது. பிறருக்கு பிணையம் இடுவதை தவிர்க் கவும். புதிய தொழில் துவங்க காத்திருப்பது நல்லது.
 
பரிகாரம்:- சனிக்கிழமை காலை 09.00 - 10.30 மணிக்குள் சனீஸ்வரருக்கு நான்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, ஐந்து மிளகு துணியில் கட்டி, திரியாக ஏற்றி வழிபாடு செய்து வர, சகல தடைகளும் நீங்கி சுபிட்சமும், காரிய சித்தியும் உண்டாகும்.