சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - சிம்மம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - சிம்மம்

தைரியமும், துணிச்சலும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!
 
இனிவரும் 26.12.2020 முதல் உங்களின் ராசிக்கு ஆறாமிட சனியே ஆட்சியாக வருவதால் உங்களின் செயல்களிலும். கடமைகளிலும் பல வளர்ச் சியை பெற்று வளம் பெறுவீர்கள். குரு ஆறாமிடத்தில் நீசம் பெற்று ஆறாம் அதிபதி யுடன் இணைவு பெறுவதால் நீச பங்க ராஜ யோக பலன்களை பெற்று மேலும் நலன் பெறுவீர்கள்.
 
சனி ஆறாமிடத்தில் அமர்வதும் உங்களுக்கு நன்மை தரும் இடமாக அமையும். எதிர்கால திட்டங்களை செயல்படுத்துவதும், திறமை அனைத்து வரைபடுத்தும் காலமாக அமையும். வெளிநாடு செல்லும் திட்டம் விரைவில் நிறைவேறும். இதுவரை பட்ட அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். பலநாள் பட்டகடன் நிவர்த்தியாகும். துன்பமில்லா நிலையும். தேவைகளுக்கு தகுந்த வருமானமும், நிலையான வேலைவாய்ப்பும். சிறந்த தொழில் வளமும் பெறுவீர்கள்.
 
எதிலும் நன்மையை அடைவீர்கள். புதிய வாகனம் வாங்குதல் பழைய வாகனத்தை மாற்றி அமைத்தல் போன்ற வசதிகளை பெறுவீர்கள். மறைமுகமான எதிரி களை அடையாளம் காண்பீர்கள். பணியாளர் களுக்கு பணிபுரியமிடத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கூடுதல் ஊதியமும் கிடைக்கும். எதை செய்தாலும் அதில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்படி செய்ய நிலையான இடத்தில் தொழிலை உருவாக்கி கொள் வீர்கள். உங்களின் ராசிநாதன் பார்வை பெறும் போதும் உச்சம் பெரும் போதும் அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள். கலை துறையினருக்கு மீண்டும் வாய்ப்புகள் தேடிவரும். முக்கியமான அரசியல் தலை வர்களின் அறிமுகம் உங்கள் வாழ்வில் திருப்புமுனையாக அமையும். குரு பெயர்ச்சிக்கு பின்பு குரு ராசியை பார்ப்பதும், எட்டாமிடத்தில் குரு ஆட்சி பெறுவதும் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். சோதனைகள் தீர்ந்து சாதனை புரியும் காலமாகவும், வெற்றி பாதையை தேடி வருவீர்கள்.
 
பரிகாரம்:- ஞாயிற்று கிழமை மாலை ராகு காலத்தில் (04.30 முதல் 06.00) ஆறு நல்லெண்ணெய் தீபமிட்டு, சனீஸ்வரருக்கு மிளகு கலந்த சாதமும், வெண் பூசணியும் வைத்து வணங்கிவர, நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.