சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - ரிஷபம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - ரிஷபம்

பாசமும், நேசமும் கொண்டு விளங்கும ரிஷப ராசி வாசகர்களே!
 
உங்களின் யோகாதிபதி சனி இது வரை அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும், தனஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்த்து வந்ததால் எடுத்த காரியமும் தடைபட்டு தொழிலில் முன்னேற்றமின்றி இருந்து வந்தீர்கள். அட்டமாதிபதி குருவுடன் இருந்து பொருளாதாரத்தில் மிக பின்னடைவை சந்தித்து வந்தீர்கள். 
 
இனி வரும் 26.10.2020 முதல் பாக்கியஸ்தானத்தில் லாபாதிபதி குருவுடன் இணைவு பெற்று லாப ஸ்தானத்தையும் பார்ப்பதால் தடைபட்ட சகல காரியங்களும் அனுகூலமாக அமையும். உங்களின் ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனி உங்களின வாழ்வில் மேன்மேலும் வளர்ச்சியை பெற்றுதர உதவிகளை தொடர்ந்து செய்து வருவார். 
 
மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தை சனி பார்ப்பதும் உங் களின் சகல விதமான செயல்களில் வெற்றியும் நன்மையும் பெறுவீர்கள். மேலும் ஓராண்டு காலம் வரை குரு வுடன் இணைந்தும், குரு உங்களின் ராசியை பார்ப்பது உங்களின் நீச பங்க ராஜ யோகமான பலன் செயல்பட துவங்கும். தொழிலிலும் உறுதியான செயல்பாடுகளில் நல்லபலன்களை பெறுவீர்கள். உங்களின் ஆறாமிடத்தை சனி பார்வை இடுவது எதிரி களில் தொல்லை ஒழியும். சனீஸ்வரின் உச்ச வீடு என்பதால் உங்களில் மறைமுகமான எதிரி களிடம் இருந்து உங்களை காப்பாற்றுவார். 
 
எதிர்ப்புகள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் செயல்படதுவங்கும். புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவீர்கள். வாகன ஒட்டிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அரசியலிலும், பொது வாழ்விலும்  சிறந்து விளங்குவீர்கள். ஒரு ஊருக்காவது தலைமை பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை அமையும். ஜென்ம ராகு குரு பார்வையால் பாதுகாப்பான சூழ்நிலை அமையும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வீடு கட்டுதல் வாகனம் புதுப் பித்தல் வசதியான வாழ்க்கை அமையும்.
 
பரிகாரம்:- சனிக்கிழமைகளில் நவகிரக சனிக்கு ஒன்பது விளக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு நீல நிற பூ வைத்து வணங்கி வர தொழிலிலும், உத்தியோகத்திலும் சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள்.