சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மேஷம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மேஷம்

வீரமும் விவேகமும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு ஒன்ப தாமிடத்தில் இருந்து வந்த சனீஸ்வரர் இனி உங்களின் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து நன்மையான பலன்களை பெற்று தரும். மேலும் கடந்த மாத பெயர்ச்சியான குரு, மகரத்தில் சனியுடன் இணைவதால் எதையும் செயல்படுத்துவதும் தர்மகர் மாதிபதி யோகமும் பெறுகிறீர்கள்.
 
உங்களின்  ராசிநாதன் உச்சம் பெறும் ராசியில் குரு, சனி இணைவு உங்களுக்கு நற்பலன்களையே பெற்று தரும். பல சாதனைகளை செய்வீர்கள். எந்த காரியமாக இருந்தாலும் இரட்டை பலன் களை பெற்று தரும். ராசியில் ஓராண்டு குருவுடன் சனி இணைவது நன்மையையும் அடுத்த ஆண்டு லாபஸ்தானத்தில் சனி வீட்டில் குரு அமர்ந்து தொடர்ந்து நன்மையையே செய்து வருவார். சனி தனது சொந்த வீட்டில் இருப்பதால் இரண்டரை ஆண்டு காலம் உங் களின் ராசிக்கு சிறந்த பலனை பெற்று தருவார்.
 
மேசத்தில் சனி நீசம் பெறுவதால் சனியால் உங்களுக்கு கெடுபலன்கள் வராது. ஆயுள். ஆரோக்கியம், தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பும் சிறந்த வளர்ச்சியும் பெற்று நன்மை அடைவீர்கள். சிலருக்கு அரசியலில் முன்னேற்றமும். புதிய பதவி அதிகார அந்தஸ்தையும் சனி பெற்று தருவார். சனியின் பார்வை பெறும் விரைய ஸ்தானமும், நான்காமிடமான மாத்ருஸ்தானமும் ஏழாமிடமான களத்திர ஸ்தானமும் அமைகிறது. 
 
இதில் விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் அசையாத சொத்து வாங்கி போடுவது நல்லது. தாயார் உடல் நலனின் கவனம் செலுத்துவதும். அடிக்கடி வைத்திய செலவும் உண்டாகும். திருமண காரி யம் சிலருக்கு எளிதாக நிறைவேறும். மனைவியுடன் வாக்குவாதம் செய் வதை தவிர்க்க நல்லது. இருக்கும் இடம் சிறப்பு என்பதால் தொழில் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள்.
 
பரிகாரம்:- சனிக்கிழமைகளில் 8 நல்லெண்ணெய் தீபம் இட்டு சனீஸ்வரரை வணங்கி ஊனமுற்றோருக்கு அன்னம் வழங்கிவர உங்களின் நியாயமான வேண்டுதல் விரைவில் நடக்கும்.