சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மீனம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மீனம்

விட்டு கொடுக்கும் மனம் கொண்ட மீன ராசி வாசகர்களே!
 
26.12.2020 முதல் சனி உங்களின் லாபஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வதும். ஓராண்டு ராசிநாதனுடன் இணைவதும் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களால் வாழ வைக்கபட்டவர்கள் ஏராளம். கடந்த காலம் பலரின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தீர்கள். இனி உங்களின் சுய கௌரவம் மேன்மை அடையும். உடல் நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்கால திட்டங்களை மேம்படுத்தி கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள்.
 
சாதனைகளை செய்து நற் பெயர் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்த போது தொழிலில் பல இடையூறுகள் இருந்து வந்தாலும் நல்ல காலமாக இனி  அமையும். மேலும்  கூட்டு முயற்சிகளுக்கு உங்களுக்கு உதவி செய்ய நண் பர்களின் உதவி கிடைக்கும். வாரிசுகளால் ஏற்பட்ட துன்பம் படிபடியாக மறையும். குடும்பத்தில் இருந்த சில குழப்பம் முடிவுக்கு வரும். வசதியான வாழ்க்கை சூழ்நிலை மாற்றிக் கொள்ள நினைப்பீர்கள். ஆனாலும் அதனை மாற்றி அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு ஓராண்டு முழுவதும் நல்ல வருமானமும்,.பணியின் மனநிறைவு உண்டாகும் மருத்துவ செலவுகள் குறையும். பின்பு உடலை பராமரித்து கொள்வீர்கள். 2022 ஆண்டு முக்கிய பதவிகள் தேடி வரும். விரும்பியபடி வாழ்க்கை சூழ்நிலையை வகுத்து கொள்வீர்கள். யாரையும் நம்பி கொண்டிருக்கமாட்டீர்கள். சுயமாக சிந் தித்து செயல்படுவீர்கள். 2023 ஆண்டு புதிய ஒப்பந்தம் போடுதல். வெளிநாட்டு தொழிலில் கூட்டு நடவடிக்கைகள் மூலம் பலன் பெறுவீர்கள். சரியான வளர்ச்சிக்கு திட்டம் தீட்டுவீர்கள். கப்பல் பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் முன்னேற்றம் உண்டாகும். தொழில் தேடி சென்று உங்களின் தனி திறமையை வெளிகாட்ட வேண்டிவரும் முழுவதும் நன்மையே நடக்கும்.
 
பரிகாரம்:- சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் மூன்று நல்லெண்ணெய் தீபமும் போட்டு பருப்பு அன்னம் வைத்து வழிபாடு செய்து வர, உங்களின் தொழிலிலும், உத்தியோகத்திலும் வளம் பெற்று பொருளாதார நன்மையை அடைவீர்கள்.
 
கணித்தவர் 
அருள் வாக்கு சோதிடர் 
திரு.ஆனந்ஜி 0091 9789341554