சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மகரம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - மகரம்

மனித நேயம் கொண்ட மகர ராசி வாசகர்களே!
 
பொதுவாக ஏழரை சனி காலங் கள் மகரத்திற்கு எந்த பாதிப்பையும் தராது என்றாலும் விரைய குருவால் பல சிரமங்களை அடைந்து வந்தீர்கள். இனி ராசியில் ஜென்ம குருவுடன் ராசிநாதன் இணைவு பெறுவதால் நீச பங்க ராஜ யோக பலன்களை பெறுகிறீர்கள். இதுவரை பட்ட  கஷ்டங்களை மறந்து எளிமையான தொழிலில் வளம் பெறுகிறீர்கள். பிற மதத்தவர்களாலும், பிறநாட்டு நண்பர்களாலும் தொழிலை வளப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். தொழிலாளர்களின் ஒற்றுமை, அவர்களின் எதிர்கால நலனுக்காக உங்களின் பங்கு மிகவும் சிறப்பானதாக அமை யும். விரும்பிய வாழ்க்கை அமைய பெறுவீர்கள். புதிய திட்டங்களை செயல்படுத்த துவங்குவீர்கள். தொழிற்சங்க  பணிகளை நிறைவுடன் செய்வீர்கள். கலைதுறையினரின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களில் இணைவீர்கள். 
 
சூரியனின் நட்சத்திரத்தில் சனி வரும் காலம் அரசாங்க காரியம் அனுகூலமாக அமையும். அரசியலில் முன்னேற்றம் பெறுவீர்கள். உங்களின் கருத்துக்குரிய மரியாதை கிடைக்கும். வியாபார சம்மந்தமான பயணங்கள் முன் னேற்றம் தரும். எண்ணெய் வியாபாரத்தில் வளம் பெறுவீர்கள். மீன் பிடிதொழில் செய்து வருபவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். சந்திரனின் நட்சத்திரமான திரு வோணத்தில் சனி இருக்கும் காலம் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவதுடன் முக் கிய பொறுப்புகள் ஏற்க வேண்டிவரும். கட மையுணர்வுடன் செயலாற்றி பரிசு பெறுவீர்.காணியில் விளைச்சல் அதிகரிக்கும் பெரிய தொழிலதிபர்களின் நட்பு நல்ல பலன் தரும்.   செவ்வாய் நட்சத்திரம் அவிட்டத்தில் சனி இருக்கும் காலம், ராணுவம், காவல் பணியில் இருப்பவர்கள். திறமையுடன் பணிபுரிவதும் நாட்டின் நலன்காக்க மிக சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டிவரும். அவசர காலத்தில் உங்களின் உதவி பலருக்கு  பயன் படும். இந்த சனி பெயர்ச்சி முழுவதும் உங்களுக்கு நற்பலன்களே தரும்.
 
பரிகாரம்:- வியாழக்கிழமை காலை 06.00 - 07.30 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து ஐந்து விளக்கு நல்லெண்ணெய் தீப மிட்டு, பழ வகைகள் வைத்து வேண்டு தலை செய்து, வரும். பக்தர்களுக்கு தானம் செய்துவிட்டு வர, உங்களின் ஒவ்வொரு காரியமும் மேன்மையும், பொருளாதார நன்மையும் பெறும்.