சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - கும்பம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - கும்பம்

உறுதியும், உயர்வும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!
 
இதுவரை லாபஸ்தானத்திலிருந்து உங்களின் ராசியை பார்வையிட்ட, உங் களின் ராசிநாதன் சனி, இனி 26.12.2020 முதல் உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ஏழரை சனியாக அமர்கிறார். ஏழரை சனி கும்ப ராசிக்கு கெடுபலன் தராது என்றா லும், உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானாதிபதி ஆட்சி பெறும்போது கெட்டவன் கெடும்போது நன் மையே விளையும். உங்களின் விரையம் அனைத்து பாதுகாப்பான சுப விரையமாக அமைகிறது. 
 
சேமிப்பு கரையும் என்பதால் அசையா சொத்து வாங்குவது நல்லது. இருப்புயின்றி வந்த வுடன் செலவு செய்து விடு வது நல்லது. தொழில் செய்து வருபவர்களுக்கு வேறு கூட்டு மூலம் புதிய தொழில் வாய்ப்பு கிடைக் கும். எதிலும் அவசரம் காட் டாமல் அவசியம் ஏற்படும் விடயங்களை செய்து நன்மை பெறு வது நல்லது பணியாளர்களுக்கு பணியில் செய்யும் வேலையை மாற்றி கொள்ள வேண்டி வரும். அவசியமான காரியங்களை உடனே செய்ய வேண்டி வரும் போது வேலை பளு அதிகரிக்கும். 
 
சனிக்கு பகை நட்சத்திரங்களான உத்தி ராடம், திருவோணம் நட்சத்திரங்களில் அம ரும் போது நிறைய சிரமம் இருந்தாலும். உங்களின் வாழ்வில் உயர்வை சந்தித்து வருவீர்கள். அரசியலில் சிலருக்கு பதவி கிடைத்தாலும் அதனை முழுமையாக அடைய முடியாமல் பல இடையூறுகள் வரும். அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் செயல்படுத்த வேண்டி வரும். வயதானவர்களுக்கு உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும். செவ்வாய் நட்சத்திரம் அவிட்டத்தில் சனி அமரும் காலம் விளையாட்டுகளிலும். கலைதுறையில் போட்டிகளில் பங்குபற்றுவீர்கள்.  எதை யும் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாவிட்டாலும் உங்களின் திறமை யால் அனைத்தையும் செயல்படுத்து வீர்கள். நன்மையும், தீமையும் கலந்த வாழ்க்கையை வென்று சமநிலையில் இருப்பீர்கள்.
 
பரிகாரம்:- சனிக்கிழமை எட்டு நல்லெண்ணெய் தீபம் நவகிரக சனிக்கு கிழக்கு நோக்கி ஏற்றி தேங்காயில் இரண்டு நெய் தீபமிட்டு வேண்டுதலை சொல்லிவர உங்களின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உங்களின் விருப்பமான வாழ்வுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும்.