சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - கடகம்

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - கடகம்

பொது நலனும், சுயநல னும் கொண்ட கடக ராசி வாசகர்களே!
 
இனி வரும் 26.12.2020 முதல் உங்களின் ராசிக்கு கண்ட சனியாக ஏழா மிடத்தில் அமர்கிறார். ஓராண்டு வரை குரு வுடன் இணைவு பெறுவதால் உங்களின் ராசி யோக பலன்களை பெறுவீர்கள்.
 
கண்ட சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வாகனம், வாங்கும் யோகமும், வீடு  கட் டும் பாக்கியம் கிட்டும். கடல் கடந்த தொழில் வாய்ப்பு சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தெய்வ வழிபாடுகளால் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தீர்த்த யாத் திரை சென்று வருவீர்கள். நல்ல நண்பர்களில் கூட்டு நன்மையாக அமையும். தாயார் வழி சொத்து சில ருக்கு வந்து சேரும்.
 
சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு பகுதி நேர வேலையும். வேறு தொழில் கூட்டும் சேரும் வாய்ப்புகள் அமை யும். அரசியலில் இருப்பவர்கள் சந்தர்ப்பவாத  கூட்டணியில் சேர்த்து பயன் பெறுவீர்கள். பொது விடயங் களில் பொறுப்புடன் செயல்பட்டு பல ரின் அன்பை பெறுவீர்கள். உங்களின் பூர்வ புண்ணியஸ்தானத்தின் அதிபதியான செவ் வாய் பார்வை சனி மீது படும் போதும், சனியுடன் இணையும் போதும் உங்களின் தைரியமும், துணிச்சலும் சிறப்பாக அமையும். கொடுத்த இடத்தில் காசு வந்து சேரும். 
 
குரு பெயர்ச்சிக்கு பின்பு கூட்டு சேரும் போது கவனமாக இருப்பது நல்லது. சூழ் நிலைகளுக்கு தகுந்தபடி உங்களை மாற்றி அமைத்து கொள்வீர்கள். அன்றாட அழியும் பொருட்கள் விற்பனை மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அன்னியர்கள் மூலம் தொழில் செய்வதும், தொழில் முன்னேற்றத்திற்கு உதவி பெறுவதும் உங்களின் வாழ்வில் புதிய வழிகளை பெற்று வளம் பெறும் வாய்ப்புகளை பெறுவீர்கள். முக்கிய நண்பர்களின் சந்திப்பால் நீங்கள் விரும்பிய வாழ்க்கை சூழ்நிலை களை மாற்றிக் கொள்வீர்கள். 
 
பரிகாரம்:- சனிக்கிழமைகளிலும் திங்கள் கிழமைகளிலும் காலை 07.30 - 09.00 மணி வரையிலும் ஏழு நல்லெண்ணெய் தீபமிட்டு சனீஸ்வரை வழிபாடு செய்து உங்களின் வேண்டுதலை சொல்லிவர விரைவில் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.