சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - தனுசு

சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள்! (2020 - 2023) - தனுசு

கடமை உணர்வும், லட்சியமும் கொண்ட தனுசு ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம சனியாக இருந்த சனிஸ்வரர், இனி வரும் 26.12.2020 முதல் உங்களின் ராசிக்கு தனஸ்தானதிபதியே ஆட்சியாக ராசிநாத னுடன் இணைந்து அமர்வதும் நான்காமிடம், எட்டாமிட லாபஸ்தானத்தையும் பார்வை யிடுவதால், தொழிலாளர்களின் வாழ் வில் நல்ல மாற்றம் உண்டாகும். கூடுதல் ஊதியத்துடன் வேலை கிடைக்கும். மாற்றம் என்பது இயற் கையாக நடக்கும். 
 
வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல், யாத்திரை சென்று வருதல் போன்ற சுப நிகழ்ச்சி கள் நடக்கும். வங்கி மூலம் கடன்பெறுதல், பழைய கடன் அடைத்தல், புதிய கடன் பெறுதல். எதிர் கால திட்டங்களை செயல் படுத்துதல் சிறப்பாக நடக் கும். அட்டமஸ்தானத்தை பார்ப்பதால் ஆயுள் பலம் பெறு வதுடன் ஆரோக்கியமான உடல் வலிமையையும் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் கூடுதல் லாபமும் பெறுவீர்கள். 
 
சூரிய நட்சத்திரத்தில் சனி அமரும் போது அரசியல் பொறுப்புகள் கிடைக்க பெறுவீர்கள்.. தலைமைக்கு ஆதரவாக செயல்படுவதும். அதற்கான முயற்சிகளுக்கு உறுதுணையாகவும் இருப்பீர்கள். சந்திர நட்சத்திரத்தில் அமரும். காலம் தாயார் வழி சொத்து சம்மந்தமான விடயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். செவ்வாய் நட்சத்திரத்தில் அமரும் காலம் ஏதாவது சிறு தடைகள் வந்து மறையும். போட்டியாளர்கள் புதிதாக உரு பெறுவார்கள். உங்களின் திறமையாலும், விழிப்புணர்வாலும் பல நன்மைகளை பெறுவீர்கள். ஆராய்ச்சி யாளர்கள் புதிய கண்டுபிடிப்பை உரு வாக்குவார்கள். கலைதுறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். மதிப் பும், மரியாதையும் தேடி வரும். சமரசமான உடன்பாட்டால் நல்ல தீர்வை தரும். விவசாய நிலத்தில் விளைச்சல் அதிகரித்து லாப கரமான வருமானம் கிடைக்க பெறுவீர்கள்.
 
பரிகாரம்:- சனிக்கிழமை வைரவருக்கு சந்தன தலை இட்டு ஏழு நல்லெண்ணெய் தீபமிட்டு எள் தானம் செய்து ஊனமுற்றோருக்க உதவி செய்துவர உங்களின் வேண்டுதல் விரைவில் நடப்பதுடன் பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள்.