சனி பெயர்ச்சி பொது பலன்கள்! (2020 - 2023)

சனி பெயர்ச்சி பொது பலன்கள்! (2020 - 2023)

இதுவரை தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இனிவரும் 27.12.2020 அதிகாலை 5.20 மணிக்கு பெயர்ச்சியாகி, தனது சொந்த வீடான மகரத்திற்கு வருகிறார். இதுவரை மகரத்திற்கு விரைய சனியாக இருந்து, விரைய குருவுடன் இணைந்து பல கஷ்டங்களை அனுபவிக்கும் சூழ்நிலை வந்தது.
 
மேலும் சென்ற வருடம் ஆறு கிரகங் கள் தனுசுவில் இணையும் போது உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தாக்கம் அனைத்து நாடுகளையும் பாதிக்க செய்தது. இனிவரும் சனி பெயர்ச்சி உலக நாடுகளில் மறு மலர்ச்சியை உண்டு பண்ணும். காலபுருச தத்துவப்படி சனியுடன் குரு மகரத்தில் தொழில் ஸ்தானத்தில் இணைவு பெறுவது உலக நாடுகள் அனைத்தும் புதிய தொழில் கொள்கைகளை உருவாக்கும்.
 
தன் நாட்டை பாதுகாத்து கொள்ள புதிய சட்டங்கள், தொழிலில் மறுமலர்ச்சியை உருவாக்கி கூட்டு முயற்சியாக அனைத்து நாடுகளுடன் பழைய ஒப்பந்தங்களை புதுப்பித்து கொண்டு புதிய நடைமுறைகளை செயல்படுத்து வார்கள். இந்த ஆண்டு மழைக்கு குறை யில்லை என்றாலும் வரும் காலங்களில் மழை குறைவாகவும், நிறைய இடங்களில் வறட்சியும். உணவு உற்பத்தியும் குறையும். வாய்ப்புகள் அமையும்.
 
தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதி பதியே அமர்வதால் மாறுபட்ட தொழில் கொள்கைகளை உருவாக்க வழிவகுக்கும். பெற்றோலுக்கு மாற்று உருவாக்க அனைத்து நாடுகளும் முயற்சிகளை செய்யும். அணு சக்தியை ஒழிக்கவும். அணுசக்தி மூலம் ஆக்க சக்தியை உருவாக்கவும் பல நாடுகள் ஒப்பந்தங்களை செய்து கொள்வார்கள். ஏழை நாடுகள் மக்களுக்கு தேவைகளை உணர்ந்து உதவி செய்ய பல நாடுகள் கைகொடுக்கும். சில இடங்களில் பூகம்பம், எரி
 
மலை குழம்புகள் வெளிபடும். கடல்மட்டம் குறையும் சூழ்நிலைகள் உருவாகும். நாட்டுக்குள் சில நாடுகளில் உள்நாட்டு போர் வீரியமடையும். மக்கள் உங்களின் வாழ்வாதாரத்திற்கு தகுந்த வழிகளை ஏற்படுத்தி கொள்வார்கள்.
 
பரிகாரம்:- சனிக்கிழமைகளிலும், ஞாயிற்று கிழமை மாலை ராகு காலத்திலும் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமீட்டு எள் அன்னம் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்து வர தொழிலும். உத்தியோகத்திலும் சிறந்து விளங்குவீர்கள்.