ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - கடகம்

ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - கடகம்

 சிந்தித்து செயல்படும் பண்பு கொண்டு விளங்கும் கடக ராசி வாசகர்களே!

 
இதுவரை உங்களின் ராசிக்கு ராகு பனிரெண்டிலும், கேது ஆறிலும் அமர்ந்து பல விடயங்களில் பணவிரயத்தையும், மனரீதியான பாதிப்பையும் தந்து வந்தார்கள். இனிவரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம் ராகு / கேது பெயர்ச்சியாகி, ராகு லாபஸ்தானத்திலும் கேது பஞ்சம ஸ்தானத்திலும் அமர்ந்து பலன் தருவார்கள். ராகு லாபஸ்தானத்தில் அமர்வது வருமானத்தை இருமடங்கு பெருக்கியும், விரயத்தையும் தருவார். பஞ்சமஸ்தானத்தில் உள்ள கேது உங்களின் குலதெய்வ வழிபாடுகளில் தடையையும், உங்களின் ஆஸ்தான குருவின் சாபத்தை பெற செய்வார். இருந்தாலும் உங்களின் ராசிக்கு யோகாதிபதி வீட்டில் கேது நீசம் பெறுவதால் அதிகமான பாதிப்பை தருவதில்லை. மேலும் சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள். அரசியலிலும், அந்தஸ்திலும் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாய்ப்பை பெறுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு மிருகசீரிட நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் திட்டமிட்ட காரியங்கள் நற்பலன்களை பெறும். விட்டு போன தொழிலை விருத்தி செய்வதும் தொழிலை மேம்படுத்தி கொள்ள நல்ல முயற்சிகளை செய்வீர்கள். கேதுவின் கெடு பலன்களை ராகு நிவர்த்தி செய்வார். 
 
ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலில் செல்வாக்கும். முக்கிய பதவியும் கிடைக்க பெறுவீர்கள். வெளிநாடு சென்றுவருதல். வெளிநாட்டு தொடர்புகள் மூலமும் நன்மை அடைவீர்கள். மக்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பெண்களுக்கு தனிமரியாதை இருக்கும். 
 
கலைத்துறையினருக்கு வரவேற்பு கிடைக்கும். விடாமுயற்சிகள் செய்து வளம் பெறுவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் போது அரசியலிலும், பொது வாழ்வில் முக்கியமான இடத்தை பிடிப்பீர்கள். உங்களிடம் இருக்கும் திறமைகளை முழுவதும் வெளிப்படுத்துவீர்கள். பொருளாதாரம் வளம் பெறும்.
 
கேது கேட்டை நட்சத்திரத்தில் அமரும் காலம் உங்களின் திட்டமிட்ட செயல்களை சிறு தடை உண்டாகும். தொடர் முயற்சியால் நன்மை பெறுவீர்கள். சிவப்பு நிற தடிப்புகள், வெளீர் நிற புள்ளிகள் தோலில் தோன்றி மறையும். காவல் துறை யில் பணிபுரிபவர்களுக்கு வெகுமதி கிடைக்கும். குலதெய்வ வழிபாடு மூலம் நன்மை பெறுவீர்கள். 
 
அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் போது போட்டி மனப்பான்மையும் விட்டு கொடுக்காத தன்மையும் உண்டாகும். தொழிலாளர் இடமாற்றம் உண்டாகும். பணியில் வேறு இடம் மாறுவீர்கள். 
 
விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் போது எதிர்பாராத தனலாபமும், கொடுக்கல் வாங்கலில் ஆதாயமும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியம் தாமதமானாலும் நடக்கும். பொருளாதார நிலை வளம் பெறும்.