ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - தனுசு

ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - தனுசு

தனக்கென்று ஒருகொள்கையை கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!

 
இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம கேதுவும், களத்திர ராகுவும் இருந்து உங்களின் வாழ்வில் வேறு சோதனைகளை தாண்டி எதிர்கால நலன் கருதி திறம்பட செயல்பட்டு வந்தீர்கள். எதிர்ப்புகளை வென்று சாதனை படைத்தீர்கள். இனிவரும் 01.09.2020 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி உங்களின் ராசிக்கு ஆறாமிடத்தில் ராகுவும், பனிரெண்டில் கேதுவும் அமர்வது உங்களுக்கு சாதகமாக அமையும். கடன்படுவதிலிருந்து விடுபடுதல் மீண்டுவருதல் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். ஆறாமிட ராகு எட்டாமிடத்தையும். நான்காமிடத்தையும் பார்வை இடுவது உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். வெளிநாட்டு பயணத் தடைகளை நீக்க வழிவகுக்கும். முதலீடு இல்லாத தொழிலில் முன்னேற்றம் பெற செய்யும் மறைமுக எதிரிகளிடமிருந்து உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குரு பெயர்ச்சி காலம் வரை 2021 முடிய நற்பலன்கள் கிடைக்கும். அதன்பின்பு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கேது விரய ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் தனஸ்தானத்தையும் பார்வை இடுவது செய்யும் தொழிலில் இருந்த சிறு தடை நீங்கி, குருவை பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் நிதானம் மிகவும் அவசியமாகும்.
 
இனி ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் இருக்கும் காலம் வரை உங்களின் ராசிக்கு நற்செய்திகள் உண்டாகும். சகோதரர்களின் அன்பை பெறுவீர்கள். விவசாய விளைச்சலும் பொருளாதார நன்மைகளும் உண்டாகும். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள். விடுபட்ட காரியங்களை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். 
 
வீடு கட்டும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். தொழில் முதலீடுகளில் கவனம் செலுத்தி செயல்படுவது நல்லது. 
 
வங்கிகளில் பிறருக்கு பிணயம் இடுவதை தவிர்த்துவிட வேண்டும். உங்களின் முயற்சிகளுக்கு சிறு தடை வந்து விலகும். சுதந்திரமாக எதையும் செய்ய முடியாமல் போகும். கார்த்திகை நட்சத்திரத்தில் ராகு அமரும் காலம் அரசியலிலும், அரசாங்க காரியங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு அலைந்து பிரச்சனைகளையும் வெல்வீர்கள். உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிபடையான உங்களின் பேச்சிற்கு நல்ல மரியாதை கிடைக்கும். வரவுக்கு தகுந்த செலவு உண்டாகும்.
 
இனி கேது கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்து செயல்படுவதால் கல்வியாளர்களுக்கு உயர்கல்விகளில் நல்ல அனுபலம் கிடைக்கும். அறியாத பல வாய்ப்புகளை பெறுவீர்கள். மாணவர்கள் உங்களின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்வார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். காரிய அனுகூலம் கிடைக்கும். 
 
அனுச நடசத்திரத்தில் கேது அமரும் காலம் தொழிலில் முன்னேற்றம் அடைந்தாலும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். பணி அமர்த்தபட்ட தொழிலாளர்கள் அடிக்கடி மாறுவார்கள். எனினும் நீங்கள் எந்த தடையின்றி செயல்படுவீர்கள். 
 
போட்டிகளை தவிர்த்து விடுவீர்கள். உங்களின் எண்ணங்களை செயல்படுத்தி காட்டுவீர்கள். சமையல் பாத்திரங்களை உற்பத்தி செல்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். விசாக நட்சத்திரத்தில் கேது அமரும் காலம் வியாபாரத்தில் நல்ல லாபமும். தனி திறமையுடன் செயல்பட்டு உங்களின் எதிர்காலம் சிறக்கும்.