2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - சிம்மம்
தனக்கென்று தனித் திறமையுடன் என்றென்றும் செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இதுவரை ஆறாமிடத்து சனியாக இருந்து யோக சனியாக இருந்தவர், இனி கண்டக சனியாக வரும் 29.03.2023 முதல் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சிம்ம ராசி சனியின் பார்வை பெறுவதும். பாக்கிய ஸ்தானத்தையும் சுக ஸ்தானத்தையும் பார்வை இடுவதும் உங்களின் உடல் நலனின் கவனம் செலுத்துவது அவசியம். உணவு விடயத்தில் கவனம் செலுத்தி, கவனமுடன் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நன்றாக இருக்கும். இருக்கும் தொழிலை விருத்தி செய்து கொள்வதுடன் வருமானத்தை பெருக்கி கொள்வீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்பட்டாலும், கடைசியில் எதையாவது மறந்து விடுவதும். ஒரே வேலையை பல முறை சென்று செயல்படவேண்டிய சூழ்நிலையும் உண்டாகும்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளிடம் ஏதாவது சச்சரவு உண்டாகும். இது எல்லாம் தற்காலிகமான நிகழ்வாக இருக்கும். நிரந்தரமான பாதிப்பை தராது என்றாலும், எதையும் விட்டு கொடுத்து சென்றால் வர வேண்டிய துன்பம் நீங்கும். பல நாட்கள் மறைத்து வைத்திருந்த விடயங்கள் வெளிபடும் சூழ்நிலை உண்டாகும் என்பதால் வருமான வரை உண்மையாக இருங்கள். எந்த காரியத்திலும் வழக்கம்போல தைரியமுடன் செயல்படுங்கள். மனபயத்தை உருவாக விட்டால், உங்களின் காரியம் கெட்டு விடும்.
விடாபிடியான உங்களின் செயல்களால் எதையும் எளிதாக வெல்வீர்கள். சிலருக்கு சிறுநீரக பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. எந்த தொழிலாக இருந்தாலும் சிறப்பாக அமையும். குறைந்த முதலீடுகளில் நல்ல வருமானம் பெறுவீர்கள். குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். எதற்காகவும், யாரிடமும் உங்களின் நிலையைத் தாழ்த்தி கொண்டிருக்கமாட்டீர்கள். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கண்டக சனி பெரும்பாலும் உடல் நல குறைவு மட்டும் தரும். உயிருக்குப் பாதிப்பைத் தராது. உடல் நலனில் தனி கவனம் செலுத்தி, கண்காணித்தால், நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் பைரவருக்கு ராகு காலத்தில் மூன்று வேப்பெண்ணெய் தீபமிட்டு வணங்கி வர, குடும்பத்தில் சுபிட்சமும், தொழிலில் நல்ல வளமும் உண்டாகி பொருளாதார வளம் பெறுவீர்கள்.