2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - மிதுனம்

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - மிதுனம்

பேச்சு வன்மையும், கவர்ச்சியும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
இதுவரையிலும் அட்டம சனியாக இருந்து வந்த சனி பகவான், பல்வேறு குடும்ப பிரச்சனை, மனஅமைதியின்மை, கடன் தொல்லை, உடல் நல குறைவுகளையும், பல அவமானங்களையும் அளித்திருப்பார். இனி 29.03.2023 முதல் பாக்கியஸ்தானத்தில் சனி அமர்வது உங்களின் லட்சிய கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் வெல்லும் வாய்ப்பையும் பொருளாதார மேன்மையும் அடையப் பெறுவீர்கள். முக்கியமாக குழந்தை பாக்கியம், பூர்வீக சொத்துகள் சம்மந்தமான பிர்ச்சனை, பொருளாதாரத்தில் வளம் பெறுதல், குடும்ப பிர்ச்சனைக்கு தீர்வுகள்... இதுபோல பல்வேறு நன்மைகளை அடைவார்கள். எதையும் நன்கு ஆலோசனை செய்து முடிவெடுக்கும் பண்பும், பக்குவமும் உண்டாகும். 
 
எந்த தொழில் செய்தாலும், அதில் முதலீடுகள் செய்யும் முன்பு நன்கு ஆலோசனை செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டுபவர்களுக்கு நல்ல வேலையும், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும், வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு வேலையும் கிடைக்கும். சிலருக்கு ஒன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் உண்டாகும். முதலீடுகள் செய்து ஆதாயம் பெறுவீர்கள். தனி திறமை வெளிபடுத்தி பொருளாதாரத்தில் சிலர் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். நீண்ட நாள் கடனிலிருந்த சிலருக்கு, மீட்பு கிடைக்கும். 
 
உடல்நல குறைபாடுகளிலிருந்து மீண்டு வருவீர்கள். உறவுகளில் இருந்து வந்த பகை உணர்வுகள் மறையும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சனி பார்வை குருவின் மீது  இருப்பது உங்களுக்கு இன்னும் வளமான வாழ்க்கை சூழ்நிலை உருவாகும். தாயாருக்கு உடல் நல குறைவு உண்டாகும். சிலருக்கு வைத்திய செலவு வரும். அரசியலில் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் சமுதாய அந்தஸ்து உயர்ந்து, வளம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று, பொருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் தொழில் நுட்ப வளர்ச்சியை பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் பைரவருக்கு ராகு காலத்தில் மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு, தொடர்ந்து வழிபட்டுவர, உங்களின் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும்.