2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - மேஷம்

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - மேஷம்

விரும்பிய வாழ்க்கையை வளமாக்கி கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!

 
இதுவரை தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து, விரையஸ்தானத்தை பார்வையிட்ட சனி பகவான், இனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்க்கவிருக்கிறார். கடந்த காலத்தில் எந்த தொழிலும் இல்லாமல் இருந்தவர்களுக்கு தொழில் அமையும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களின் பிறவி கர்வ வினைகளை விடுவித்துக் கொள்ள ஆன்மீக பரிகாரங்களை செய்து மீண்டிருப்பீர்கள். இனி இந்த லாபஸ்தானத்தில் உங்களுக்கு முழுமையான யோக சனியாக வரவிருப்பது நல்ல பலனை தரும். பிறந்த ஜாதகத்தில் சனி நீசம் பெற்றிருந்தால், இந்த நற்பலன்கள் கிடைக்காது. ராசிக்கு ஆறாமிடம் எட்டாமிடம் பனிரெண்டில் சனி இருந்தாலும் நற்பலன்கள் இருக்காது. மற்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பும், அதன் மூலம் ஆதாயம் பெறுதல், படித்து நல்ல வேலை எதிர்ப்பார்பவர்களுக்கு வேலையும், பொருளாதார மேன்மையும் உண்டாகும்.
 
வெளிநாட்டு வேலை கிடைக்கப்  பெறுவீர்கள். பலருக்கு வேலை கொடுக்கும் தொழிலை செய்து, வளம் பெறுவீர்கள். தாயார் வழிசொத்து சிலருக்கு கிடைக்கும். பழைய வழக்குகள் நிலுவையிலிருந்து முடிவுக்கு வரும். கடுமையான உழைப்பால் உங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாகன ஓட்டிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சொந்த வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் அமையும். புத்திரர்களுக்கு வேலையும், திருமணமும் நடக்கும். வெளியூரிலிருந்து பணி செய்து வருபவருக்கு சொந்த ஊருக்கு  அருகில் கிடைத்து அலைச்சலைத் தவிர்ப்பீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும். உடல் நலகுறைவாக இருந்து வந்தவர்களுக்கு, உடல் ஆரோக்கியம் பெறுவீர்கள். உறவுகள் பலப்படும். நண்பர் ஆதரவு கிடைக்க  பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஆஞ்சநேயர் வழிபாடும். பைரவருக்கு முந்திரி பருப்பு மாலையும் போட்டுவர உங்களில் வாழ்வு வளம் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள்.