2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - கடகம்

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - கடகம்

லட்சியத்தை விடாமல் முயற்சி செய்து வெல்லும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அட்டம சனியாக வருவது தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய காலமாகும். கண்ட சனி முடிந்து. அட்டம சனியாக வரும் 29.03.2023 முதல் வருவது சற்று கவனமுடன் செயல்படவேண்டிய காலமாக அமையும்/ எதையும் முன்கூட்டியே யோசித்து எதிலும் அவசரமின்றி நிதானமாக செயல்படுவது நல்லது. இந்த ஆண்டு வக்கிரமாகி. மீண்டும் மகர ராசிக்கு சென்று டிசம்பரில் மீண்டும் கும்பத்திற்கு வருகிறார். ஏப்ரல் வரை குரு பார்வை ராசிக்கு இருப்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். தொழிலாளர்களின் வேலை பளு அதிகரிக்கும். எதிலும் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு மூலம் சிலருக்கு புதிய பொறுப்புகளைப் பெற்று செயல்படவேண்டி வரும். 
 
அட்டம சனி என்றால் அனைத்திற்கும் பயப்பட வேண்டியதில்லை பிணையம் இடுவதை தவிர்க்கவும். பிணையம் போடாவிட்டால் அவரின் தொடர்பு துண்டிக்கப்படும் என்றாலும், அதை நினைக்காமல் உங்களின் வாழ்க்கை சூழ்நிலையே மாற்றிக் கொள்ளும்படி அமைத்து கொள்ளவும். அதிகம் யாருடனும் பேசுவதைத் தவிர்த்து, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் படி இருந்து வந்தால் எதுவும் பிரச்சனைகள் வராது. கலைத்துறையினருக்கு வாய்ப்பு அமைந்தாலும் பொருளாதார நிலை சற்று குறைவாக இருக்கும். மன உலைச்சலை தவிர்க்க நடப்பதை மட்டும் யோசித்து செயல்படுங்கள். 
 
எதிர்காலம் தானாக செயல்படும். குடும்பத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் அமைதியாக இருந்து விடுங்கள். விளையாட்டு துறையினருக்கு நல்ல ஆரோக்கியமான போட்டி அமையும். கடன் பெற்று கடன் தீர்ப்பீர்கள். அறிமுகமில்லாதவர்களுடன் கூட்டுத் தொழில் செய்வது, ஒன்லைன், லொத்தர், தொழிலில் கூடுதல் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள். கணவன் -மனைவி சச்சரவுகளை குறைத்து கொண்டு, சுகமாக வாழ விட்டு கொடுத்து போவது நல்லது.
 
பரிகாரம்:
 
நவகிரக சனிக்கு சனிக்கிழமைகளில் எட்டு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும் அல்லது ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவருக்கு எட்டு தீபம் நல்லெண்ணெயில் ஏற்ற கஷ்டம் விலகி, நன்மை உண்டாகும்.