2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - தனுசு

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - தனுசு

தைரியத்துடனும், துணிச்சலுடனும் செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
 
இதுவரை ஏழரை ஆண்டு காலம் சனி பகவான் உங்களை பல வழிகளில் தொல்லைகளையும், குடும்பத்தில் பல்வேறு சச்சரவுகளையும் கொடுத்து பல அனுபவங்களை பெற்று தெளிவடையச் செய்திருப்பார். இனிவரும் 29.03.2023 முதல் உங்களின் ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்று தருகிறார். உங்களுக்கென்று தனிதிறமை கொண்டு விளங்கிட தனி தகுதியை உருவாக்கி கொள்வீர்கள். 
 
சனி, யோகச் சனியாக வருவதால் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். உங்களின் ராசிநாதன் பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பது இன்னும் சிறந்த நற்பலன்களை பெற்றுத் தரும். எந்த தொழில் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண்பீர்கள். பலருக்கு நல்ல ஆலோசனைகளை சொல்லும் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதுவரை பட்ட கடன் தொல்லை நீங்கி எல்லா வளமும் பெறுவீர்கள். அடிக்கடி குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருதல், கேளிக்கை விடுதிகளுக்குச் சென்று வருதல் போன்ற பல நல்ல விடயங்கள் உங்களின் வாழ்வில் புதிய அனுபவத்தைப் பெற்று தரும். 
 
பல தொழில் செய்து அனைத்திலும் பல இழப்புகளை சந்தித்து வந்த உங்களுக்கு இனி துணிந்து எந்த காரியத்தையும் செய்யும் வல்லமையையும் பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த பல உறவுகளும், நண்பர்களும் அதனை மறந்து உங்களுடன் இணைவார்கள். விளையாட்டுத் துறை கலைத்துறையினருக்கு எதையாவது சாதிக்க வேண்டும் என்று உணர்வுகள் எழும்.  நினைத்தபடி அதனை செயல்படுத்தும் வாய்ப்புகளும் அமையும். மாணவர்களுக்கு நீங்கள் விரும்பிய கல்வி கிடைத்து நற்பலன்களையும் கல்வியில் மேன்மையையும் அடைவீர்கள்.
 
வேலை தேடி வருபவர்களுக்கு வேலையும், வெளிநாட்டு வேலைக்கும் காத்திருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். இந்த யோக சனி காலத்தை பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவீர்கள்.

பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபட்டு தூப தீபம் காட்டி வர உங்களுக்கு அனைத்து காரியமும் நினைத்ததை விட நன்றாக அமையும். பொருளாதாரம் உயரும்.