2023 - 2025 சனி பெயர்ச்சி பொது பலன்கள்

2023 - 2025 சனி பெயர்ச்சி பொது பலன்கள்

சுபகிருது தமிழ் ஆண்டு பங்குனி மாதம் 15-ம் தேதி 29.03.2023 புதன் கிழமை பகல் 01.06 மணிக்கு அவிட்டம் 2-ம் பாதத்திலிருந்து அவிட்டம் 3-ம் பாதம் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
 
சனி பெயர்ச்சியுடன் நாட்டு நடப்புகள் இனி எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். கால புருச தத்துவப்படி சனி பகவான் தன் சொந்த வீடான கும்பத்தில் அமர்வது, பதினென்றாம் வீடு ஆகிறார். இதுவரை சொந்த தொழில் செய்து வந்துவர்களுக்கு எந்த வருமானம் சரியாக இல்லாத போது இனி, அவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் நுட்ப உதவியுடன் பல நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்தி கொள்வார்கள். நிலக்கரி சுரங்கங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படும். கருப்பு கலர் வளர்ச்சி, வளம் பெறும். ரத்த சோகை நோய் குணமடைய  புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு புதிய சலுகைகள்  கிடைக்கும். 
 
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வருபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வாகனம், புதிய உலோகம் கண்டுபிடிக்கப்படும். அதன் மூலம் உலக நாடுகளில் வர்த்தக வசதிகளை உண்டாக்குவார்கள். அரசியல் தலைவர்களுக்கு தண்டனைகள் (தவறு செய்தால்) கிடைக்கப் பெறுவார்கள். முதலீடு இல்லாத நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் வீரியமடையும். மலைகளில் தீ விபத்து உண்டாகும். 
 
வடகிழக்கு பருவ மழை தீவிரமாகி, கூடுதல் மழை பெய்து, பெருந்த சேதத்தை கொடுக்கும்.  கடல்வழி போக்குவரத்தில் கூட்டு முயற்சிகளால் நாடுகளுக்கு  புதிய ஒப்பந்தம் உருவாகும். பசுமாடுகள் புதிய  நோயால் உயிரிழக்கும் சூழ்நிலை உருவாகும். ராணுவ படைகளில் புதிய ஆட்சேர்ப்பு இருக்கும். மலிவான விலைகளில் உடல் நலகேடு விளைவிக்கும் உணவு பண்டங்கள் விற்பனைக்கு வரும். மக்கள் அடிக்கடி அதிர்ச்சி தரும் சம்பவங்களை சந்திக்கும் நிலை உருவாகும்.

பரிகாரம்:
 
அடிக்கடி ஆலயங்களுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்யுங்கள். ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்யுங்கள். மருத்துவர்கள் ஒரு சிலருக்காவது இலவசமாக மருந்து கொடுத்து புண்ணியம் தேடுங்கள்.