சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - கடகம்

விருப்பமான வாழ்வை தெளிவாய் அமைத்துக்கொள்ள விரும்பும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் பின்பு தனஸ்தானத்தில் பார்வை அமைவதும். உங்களின் வாழ்வுக்கு சிறப்பான மாற்றம் உண்டாகும். அட்டம சனி காலம் என்பதால் பிணையமிடுவதும், யாருக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வரலாம் என்பதால், அனைவரிடமும் பேச்சை குறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதும் நன்மை தரும். 
 
தேவையில்லாத விடயங்களுக்கு கூட வழக்குகள்... பிறர் செய்த குற்றத்திற்கு பழி ஏற்பது.. அழைத்தாலும் செல்லாமல் தேவையான காரியங்களுக்கு மட்டும் சென்று வருவது நல்லது. கடன் படுதல், பழைய கடன் அடைத்தல், புதிய செலவுகள் மூலம் தேவைகள் அதிகபடுத்துதல் வரும் என்பதால், சில காரியங்களில் ஈடுபடும் போது சற்று கவனமுடன் அவசரமின்றி இருத்தல் நலம். 
 
புதிய திட்டங்களையும், தொழில் வாய்ப்புகளையும் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறப்பு. வெளிநாடு செல்லவும், வேலை வாய்ப்புகளுக்கு பணம் தருவதும் முழு உத்திரவாதம் இருந்தால் மட்டும் செயல்படுவது கவனம் அவசியம். குரு பார்வை பெறும் காலம் வரை கவனமுடன் இருந்தால் உங்களுக்கு நன்மை. உங்களின் யோகாதிபதி செவ்வாய் இருக்குமிடத்தை வைத்து சில காரியம் உங்களுக்கு சாதகமாக அமையும். 
 
அட்டம சனி காலங்களில் தெய்வ வழிபாடு மூலம் எதையும் பிரச்சனைமின்றி தடுக்கலாம். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து செயல்பட்டால் நன்மை உண்டாகும். சனி கொடுத்தால் யார் தடுப்பார். உங்களின் சுய ஜாதகத்தில் ஆறாமிடம், பனிரெண்டாமிடத்தில் சனி இருந்தால் அவர்களுக்கு யோக சனியாக அள்ளிக் கொடுப்பார்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, ஆரஞ்சு, ரோஸ்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
2, 6, 9.

இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு திரி போட்டுவர, தீமை நீங்கி நன்மை கிட்டும். எறும்பு புற்றில் அரிசி, சர்க்கரை கைபிடி போட்டுவர அட்டம சனி தாக்கம் குறையும்.

வெண்மை, ஓரஞ்சு, ரோஸ்.