ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - விருச்சிகம்
விறுவிறுப்பாக எதையும் செய்ய துடிக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆண்டின் துவக்கத்தில் குருவின் பார்வையும், மூன்றில் சனியும் அமைய பெறுவது உங்களின் செயல்களின் வேற்றுமையின்றி நல்லபலனைப் பெறுவீர்கள். குருவின் ஆணித்தரமான பார்வையை பெறுவது உங்களின் தைரியம் துணிச்சலுக்கு நற்பலன் கிட்டும் என்றாலும், உங்களின் ராசிநாதன் உங்களின் ராசிக்கு சாதகமான இடத்திலிருக்கும் காலம் சிறப்பான முன்னேற்றம் கிடைக்க பெறுவீர்கள்.
சில துன்பங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள சிலர் தெய்வ வழிபாடுகளை தொடர்ந்து செய்து கொள்வது அவசியம். உங்களின் செயலில் மெத்தனமாக சில வேலைகளை செய்யாமல், விறுவிறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரிய அனுகூலம் பெறுவீர்கள்.
ஏப்ரலுக்கு பின்பு குரு தனஸ்தானத்தை பார்ப்பது உங்களுக்கு வருவாயையும் புதிய தொழில் வளத்தையும் பெறக்கூடிய சூழ்நிலைகளைப் பெறுவீர்கள். அதுபோல வெளிநாடு செல்ல முயற்சிகளை செய்வருக்கு வெளிநாடு பயணம் சிறப்பாக அமையும்.
எதிரிகள் படிப்படியாக மறைவார்கள். உங்களின் தயவில் வாழ்ந்த சிலர் உங்களை வேண்டியபோது பொறுத்து கொண்டே இருந்தவர்கள். சமயத்தில் தக்கப் பதிலடிக் கொடுப்பீர்கள். காலத்திற்கு தகுந்தபடி அவசியமான விடயங்களை ஒதுக்கி தள்ளிவிட முடியாது என உணர்ந்து செயல்படுவீர்கள்.
விளையாட்டுத் துறையினருக்கு எல்லா சவால்களையும் முறியடிக்கும் துணிச்சல் உண்டாகும். மாணவர்கள் கல்வி உன்னதமான பலனைப் பெறுவீர்கள். முக்கிய காரியங்களை செயல்படுத்தி வளம் பெறுவீர்கள். புனிதமான தெய்வ வழிபாடுகள் உங்களின் விரைவில் வளம் பெற செய்யும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 7, 9.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஜனவரி, பிப்ரவரி, செப்டம்பர், அக்டோபர்.
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை விநாயகரின் தரிசனமும் மாலை சிவன் தரிசனமும் தொடர்ந்து செய்துவர உங்களின் அனைத்து காரியங்களிலும் விரும்பியபடி அனைத்து பெறுவீர்கள்.