ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - துலாம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - துலாம்

விரும்பியதை விரும்பியவாறே அடைய நினைக்கும் துலாம் ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு சனி பஞ்சமஸ்தானத்தில் அமர இருக்கும் காலம் சிறப்பு, தற்போது சனி உங்களின் ராசியை பார்வை இடுவதால் தொழிலில் சில முன்னேற்றம் இருந்தாலும் சனிபெயர்ச்சிக்கு பின்பு சிறப்பான பலன்களை பெற்று தருவார். 
 
குரு தனது மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானத்தை பார்வை இடுவதும் உங்களுக்கு ஆண்டு முன்பகுதியில் ஓரளவு நல்ல பலன் பெற்றாலும் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்கள் ராசியை பார்ப்பதால் எதை தொட்டாலும் சிறப்பான நற்பலன்களை அடைவீர்கள். குறுகிய காலத்தில் நீங்கள் எண்ணிய நல்ல பலன்களைப் பெறுவீர்கள். 
 
பொது நல நோக்கங்களை பெற்று எதையும் பெருந்தன்மையுடன் செயல்படுவீர்கள். காலத்தை அறிந்து குடும்ப ஒற்றுமையையும், குடும்பத்தின் மகிழ்ச்சியை குறைவின்றி பார்த்துக் கொள்வீர்கள். உங்களின் ராசிநாதன் நல்ல இடத்தில் அமரும் காலம் உங்களுக்கு சிறந்த கலை சேவையையும் தனி திறமையையும் வளர்த்துக் கொள்வீர்கள். 
 
சுபகாரியங்கள் வீட்டில் நடக்கும். உங்களை எப்பொழுது எழுச்சியுடன் வைத்துக்கொள்வீர்கள். தன்னை பற்றி புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் எதையும் சமமாகவே எடுத்துக் கொள் வீர்கள். மனிதாபிமானமும், வெகுளிதனமும் உங்களிடம் நிறைய இருக்கும். 
 
வேலையிலிருந்த வந்த கடுமை குறைந்து, ஓரளவு உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். சுலபமாக சில மொழிகளைக் கற்றுக்கொள்வீர்கள். மருத்துவ துறையில் வெற்றியும், தன்னம்பிக்கை பெறுவீர்கள். 
 
விவசாய பொருட்கள் நல்ல விளைச்சலுடன் கூடுதல் வருவாயும் கிட்டும் புதிய தொழிலை துவங்குவதில் இருந்த தயக்கம் நீங்கி நன்மை பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
வெண்மை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
3, 6, 8.

அதிர்ஷ்ட மாதங்கள்: 
 
மே, ஜுன், செப்டம்பர், நவம்பர்.

நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமை முருக கடவுளையும், வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு. உங்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும். மனம் உருக வேண்டி வர நிச்சிய பலன் கிட்டும்.