ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - கும்பம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - கும்பம்

தன்னால் எதையும் சாதிக்க முடியும் எனும் கும்ப ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு முன் பகுதி விரைய சனியாக இருப்பதும் தனஸ்தானத்தில் குரு அமர்வதும் சில ஏற்ற இறக்கம் இருந்தாலும் உங்களை சரிசெய்து கொள்வீர்கள். முக்கிய விடயங்களை தாமதம் கொள்ளாமல் செய்து முடிப்பீர்கள். 
 
புதிய திட்டம் காரணமின்றி தள்ளிபோகும். எதையும் செயல்படுத்த தாமதம் ஆகும். குடும்பத்தில் புதிய செலவுகள் வந்து சிரமங்களை அடையும் சூழ்நிலை உருவாகும். அரசியலில் எதையும் சாதிக்க முடியாமல் தள்ளி போகும். வரும் ஏப்ரல் முதல் உங்களின் சகல எண்ணமும் ஜெயம் ஆகும். 
 
ஜென்ம சனி உங்களின் நன்மதிப்பையும், செல்வாக்கும் உயர செய்வார் நீங்கள் செய்யும் தொழிலில் கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் பெறும் வாய்ப்பையும் பெற்றுத் தருவார். அரசியலில் மக்களின் செல்வாக்குகளை பெறுவீர்கள். உங்களை தஞ்சமென்று வந்தவர்களை வளம் பெற செய்வீர்கள். 
 
முக்கியமான சில விடயம் செயலுக்கு வரும் போது உங்களுக்கு அது நல்ல பலனை தரும். உங்களின் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தை பார்ப்பது உங்களுக்கு தொழிலில் மேன்மையை அடையசெய்வார். கலைத்துறையினருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து சேரும். 
 
வெளியூர், வெளிநாடுகள் பயணம் உங்களை மேலும் ஊக்கபடுத்தும் மாணவர்களின் கல்வி வளம் பெறும் பெண்களுக்கு நினைத்த காரியம் கைகூடும். திருமண தடை நீங்கி திருமணம் சிலருக்கு சிறப்பாக நடக்கும். விளையாட்டு துறையினருக்கு ஊக்கம் பெற்று நலம் பெறுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
3, 8, 9.

அதிர்ஷ்ட மாதங்கள்:
 
மே, ஜுன், செப்டம்பர், அக்டோபர்.
 
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
பிரதோச காலங்களில் நந்தியை வழிபாடு செய்து அபிசேகப் பொருட்கள் வாங்கி தந்து வணங்கி வர உங்களின் தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மையை பெறுவீர்கள்.