ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - கடகம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - கடகம்

எளிமையாக எதையும் செய்து முடிக்கும் கடக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு முன் பகுதியில் குரு பார்வை பெறுவதும், சனி பார்வை பெறுவதும் உங்களின் ஆக்கப்பூர்வமான செயல்கள் மேன்மையை பெற்றுத் தரும். தன் சுயமான எண்ணங்களாலும், முயற்சிகளாலும் உங்களின் அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு ஏற்பட உங்களை மாற்றிக் கொள்வீர்கள். 
 
அரசியலில் உங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். பொது விடயங்களில் குடுத்த வாக்கும். சொன்ன சொல்லும் மாறாமல் இன்று நடக்க வேண்டுமென்று தினமும் நீங்கள் இறைவனிடம் வேண்டிக் கொண்டால் உங்களின் ஒவ்வொரு செயலும் சிறப்பாக அமையும். 
 
சிறு விடயத்தைக் கூட நொடி பொழுதில் செய்து நன்மை அடைவீர்கள். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் உங்களுக்கு அட்டமசனி வருவதால் இளந்தலை முறையினருக்கு சற்று கவனமும் எதையும் யோசித்து செயல்படுவது, பிறருக்கு பிணயம் போடுவது எதையும் நான் சாதித்து விடுவேன் என்று இறுமாப்பு கொள்வது தவிர்ப்பது நல்லது. வயதானவர்கள் தங்கள் உடலை பராமரித்துக் கொள்வதும், சில அவசியமற்ற, உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. 
 
குரு உங்களின் பாக்கியஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானத்தில் வந்து அமர்வது உங்களின் தொழிலில் அகல கால் வைத்து செயல்படாமல் அளவாக தொழிலில் அதிலும் கூட்டுத் தொழிலில் கவனமுடன் செயல்படுவது மிகவும் சாலச் சிறந்தது. வெளிநாடு தொழில், வெளிநாடு பயணம் சிறப்பாக அமையும். வரவு செலவுகளில் கவனமுடன் இருக்கவும். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.

அதிர்ஷ்ட எண்கள்: 
 
2, 5, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
பிப்ரவரி, ஜுலை, செப்டம்பர்.
 
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு விளக்கு வைரவரை பார்த்து ஏற்றி வந்தால் உங்களின் அனைத் துவித கஷ்டமும் நீங்கும்.