ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - தனுசு

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - தனுசு

புத்துணர்வும் புதிய வாழ்வும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களுக்கு மிக தெளிவான, மன உறுதியான ஆண்டாக அமையப் பெறுவீர்கள். குரு உங்களின் ராசிநாதன் முதலில் நான்காமிடத்தில் அமர்ந்து இருக்கும் காலம் சொந்த வீடு, மனை வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள். பல கடன் தொல்லைகளும் முடிவுக்கு வரும் வெறுப்புடன் உங்களை பார்த்தவர் களுக்கு தக்க தருணத்தில் அவர்கள் உணரும் வண்ணம் செயல்படுவீர்கள்.
 
முக்கிய விடயங்கள் எல்லோரி டமும் பகிர்ந்து கொள்வீர்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். ஏப்ரல் முதல் உங்களின் ஏழரை சனி காலம் முழுவதும் மறைந்து புதிய பொழிவுடன் மன மகிழ்ச்சியுடனும் வெற்றியை காண்பீர்கள்.
 
திட்டமிட்டு செய்து வந்த காலம் உங்களை ஊக்கபடுத்தும் சாதாரணமான விடயத்தைகூட உன்னிப்பாக பார்த்துக் கொண்டு செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் நீங்கள்பட்ட சொல்ல முடியாத துன்பங்களிலிருந்தும், பெற்ற அவமானங்களிலிருந்து விடுபட செய்தது உங்களின் பெருமிதம் கொள்ள செய்யும் கலைத் துறையினர் தேக்கநிலை மறைந்து மீண்டும் செயல்பட துவங்குவீர்கள்.
 
புதிய தொழில் வாய்ப்புகளை சிலர் பெற்று மகிழ்வீர்கள். வித்தியாசமான சிந்தனைகள் உங்களைத் தொடர்ந்து வழிநடத்தும் போது இந்த காலத்திற்கு உகந்த பலன்களை தரும் என உணர்ந்து செயல்படதுவங்குவீர்கள். அரசியலிலும், உத்தியோகத்திலும் சில மாற்றங்கள் உண்டாகும். 
 
குடும்பத்திலிருந்து வந்த சலசலப்பு நீங்கும். ஒற்றுமை உணர்வு  கொண்டு செயல்படுவீர்கள். பெண்களுக்கு தொழிலில் வாய்ப்பும். பொருளாதார மேன்மையும் உண்டாகும். தாயார்வழி சொத்து கிடைக்கும். மகிழ்ச்சியான உங்களின் வாழ்க்கை சூழ்நிலை உங்களை ஏற்றம் பெற செய்து நற்பலன்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள். ஆரஞ்சு, சிவப்பு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 3, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்: 
 
மே, ஜுன், ஆகஸ்ட், நவம்பர்.
 
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
மூல நட்சத்திரக்காரர்கள் ஆஞ்சநேயரையும், பூராட நட்சத்திரக்காரர்கள் மகாலெட்சுமியையும், உத்திராட நடசத்திரக்காரர்கள் சிவனையும் தொடர்ந்து வழிபட்டு வர உங்களின் அனைத்து காரியமும் மிகபெரிய வெற்றியைத் தரும்.