2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம்

நேர்மையையும், உண்மையையும் கொள்கையாக கொண்ட துலாம் ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் இருந்த ராகு இனிவரும் 26-04-2025 முதல் பஞ்சம ராகுவாகவும், பனிரெண்டாமிட கேதுவாக லாபஸ்தானத்திலும் அமர்வது உங்களின் லாப துன்பங்களை சீர் செய்வார்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவது அனுகூலங்களில் சின்ன சின்ன தடைகள் உண்டானாலும் உங்களின் முயற்சிக்கு சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள். எதையும் பிறரின் உதவியுடன் செய்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும். புத்திரர்களின் மூலம் சிலருக்கு ஏதாவது சவால்கள் உருவாகும். அதற்கு சில முயற்சிகளும், சிரமமும் கொள்ள வேண்டிவரும். கொடுத்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் உருவாக்கி கொள்ள முடியாமல் போராடும் போது குருவின் பார்வை பெறும் போது.... குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களுக்கு வரும் துன்பம் பனி போல மாறிவிடும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
லாபஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்ப்பது மனதில் தெளிவையும் செய்யும் தொழிலில் நம்பிக்கையும் உண்டாக செய்வார். பொது நலன் கருதி நீங்கள் செயல்படும் போது மக்களின் ஆதரவும் உங்களுக்கு பெரிய பலனை பெற்றுத் தரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொள்ள வாய்ப்பு அமையும். அரசாங்க பணிகளில் மிக சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களின் ராசியை குரு பார்வைபடும் போது இன்னும் மறுமலர்ச்சியை பெறுவீர்கள். புதிய சகாப்தத்தை உருவாக்கி வளர்ச்சி பெறுவீர்கள். அதையும் ஆர்பாட்டம் இன்றி அமைதியுடன் செயல்படுவீர்கள். தனி திறமையுடன் அனைத்தையும் செயல்படுத்துவீர்கள்.
பரிகாரங்கள்:
செவ்வாய், சனிக்கிழமைகளில் தொடர்ந்து நரசிம்மர் வழிபாடு செய்தும் மிருகங்களுக்கு உணவு, தண்ணீர் வைப்பதன் மூலம் உங்களின் செயல்கள் பலன் அடைந்து பொருளாதாரம் வளம் பெறும்.