குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - துலாம்

எதையாவது சாதிக்க வேண்டுமென்ற கொள்கை கொண்ட துலாம் ராசி வாசகர்களே!
இதுவரை அட்டம குருவாக இருந்த குரு பகவான் இனிவரும் 11-05-2025 முதல் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியையும், மூன்றாமிடம், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். இதுநாள் வரை பல தடைகளை சந்தித்து வந்த உங்களுக்கு நல்ல காலமாக அமையும்.
உங்களின் ராசியை குரு பார்ப்பதால் உடல் நலனில் வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சியை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்து வருபவருக்கும். மருத்துவ துறையில் இருப்பவருக்கு இந்த காலம் நல்லதாக அமையும். தங்கம், வெள்ளி வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சொந்த ஊரிலிருந்து வெளியில் சென்று பிரபலம் அடைவீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
மூன்றாமிடமான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். எடுத்த செயலில் ஊக்கமும், ஆக்கமும் உண்டாகி பெரருளாதாரத்தில் மேன்மை பெறுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பட்டதுன்பம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். ஆன்மீக சேவையும், ஆர்வமும் உங்களுக்கு பக்க பலமாக செயல்பட்டு மேன்மை பெறுவீர்கள்.
பஞ்சமஸ்தானத்தில் ஏற்கனவே சனி / ராகு இணைந்திருப்பது அவர்களை குரு பார்வை வருவது குலதெய்வ அனுகிரகமும் கொடுத்த இடத்தில் பணம் வந்து சேரும். நீங்கள் கொடுத்த உத்திரவாதத்தை செயல்படுத்துவீர்கள். பூர்வீக இடத்தில் உங்கள் பெயருக்கு நிறைவான சூழ்நிலை உண்டாகும்.
08-10-2025 முதல் குரு உங்களின் தொழில் ஸ்தானத்தில் வருவதால் புதிய தொழில் முயற்சிகளை கைவிட்டு செய்யும் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. கூட்டு தொழிலை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெய் தீபமேற்றி குரு காயத்ரி சொல்லி கடலை பருப்பு நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியைத் தரும்.