குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - துலாம்
மாற்றத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கும் துலாம் ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதும் லாபாதிபதி சூரியன் உச்சம் பெற்று ராசியை குருவுடன் பார்ப்பதும் நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். பல தடவை முயற்சி செய்தும் வெளிநாடு செல்ல முடியாமல் இருந்த நிலை மாறி விரைவில் வெளிநாடு செல்வீர்கள்.
கடந்த காலத்தில் உடல் நலனில் இருந்த பிரச்சனை மறைந்து, உடல் நலன் தேறி ஆரோக்கியம் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பலவித தடைகள் இனி நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். விளையாட்டுத்துறையிலும், சிலருக்கு அடிக்கடி வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். தனி கவனத்துடன் செயல்பட்டு எல்லா விதமான காரியத்தையும் சீராக செயல்படுத்துவீர்கள்.
சாதிக்க நினைத்ததை தொடர் முயற்சிகளின் மூலம் சாதித்துக் காட்டுவீர்கள். வறியவருக்கு உதவி செய்வீர்கள். முக்கியமான விடயத்தில் ஆலோசனைகளை செய்து பின்பு முடிவுகளை எடுப்பீர்கள். புதிய திட்டங்களுக்கு வடிவம் தந்து செயல்படுத்த துவங்குவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு, நிலுவையிலிருந்த தடை இனி நீங்கி நல்ல பலன்களை கிடைக்கப் பெறுவீர்கள்.
பலருக்கு பொருளாதாரத்தில் பின்னடைவுகள் நீங்கி, மேன்மையை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அமையும். விளை நிலங்களில் வருமானம் பெருகும். தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். பண புழக்கம் இருக்கும் தொடு சிகிச்சை நிபுணர்களின் வருமானமும் பெருகும். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். கடவுள் வழிபாடு மூலம் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் சுப்ரமணியருக்கு இலுப்பெண்ணெய் தீபமிட்டு சிவப்பு நிற பூ வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியமும் அனுகூலமாகும்.