குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மகரம்

குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024 - மகரம்

உறுதியுடன் எதையும் செயல்படுத்தி காட்டும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு துவக்கத்திலேயே குரு பார்வை வர இருப்பதால் குரு பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் அனைத்து காரியங்களும் செயல்பட துவங்கும் சுகஸ்தானத்தில் சூரியன் உச்சம் பெற்றிருப்பது உங்களின் செல்வாக்கு உயரும். அரசியலில் ஏற்றம் பெறுவீர்கள்.
 
உங்களின் வெளிநாடு பயணம் விரைவில் உறுதி செய்யபடும். கலைத்துறையினருக்கு முக்கிய ஒப்பந்தங்கள் மூலம் வருவாய் ஈட்டுவீர்கள்.  பொது வாழ்வில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த முறையில் ஏற்பாடுகள் செய்து பாராட் டு பெறுவீர்கள். 
 
கனவுகளை செயல்படுத்த தேவையான உதவிகள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். செவ்வாய், சனி சேர்க்கை போட்டி, பொறாமைகள், வெறுப்பு போன்ற சில தொல்லைகள் இருந்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் யோகாதிபதி மூன்றாம் வீட்டில் உச்சம் பெறுவதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நன்மையைத் தரும்.
 
பெண்களின் கூட்டுத் தொழிலும், தையல் சம்மந்தமான கார்மெண்ட் தொழிலிலும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஆடைகள் விற்பனை மூலம் நல்ல லாபமும் பெறுவீர்கள். சகோதரர்களின் மூலம் சிலருக்கு சங்கடங்கள் வந்து மறையும்.
 
எதற்கும் தனிமையாக செய்வதை விரும்பும் நீங்கள் பிறரின் ஆலோசனைகளை கேட்டு அதன் முக்கியத்துவத்திற்கு தகுந்தபடி நீங்களே முடிவு செய்வீர்கள். விளையாட்டு துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சச்சரவு படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி நிறையும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்:
 
சனிக்கிழமைகளிலும், ஞாயிறுகிழமைகளிலும் ராகு காலத்தில் வைரவருக்கு நீல நிற பூ மாலை சாத்தி, மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் வெற்றியைத் தரும்.