சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - விருச்சிகம்

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - விருச்சிகம்

தடைகளை உடைத்து திறம்பட செயல்பட்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இதுவரை குரு பார்வை பெற்று வந்தது இனிவரும் 22.04.2023 முதல் குரு தொழில் ஸ்தானத்தையும். தன ஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழிலில் மேன்மை அடைந்து வருமானத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். பெரிய கடனை அடைத்து சிறிய லாபம் காண்பீர்கள். உங்களின் விரையஸ்தானத்தை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவுக் குறையும். 
 
தொழில் ஸ்தானாதிபதி சூரியன் கோச்சாரப்படி செல்லும் இடத்தை பொறுத்து உங்களின் தொழிலில் நன்மையை பெறுவீர்கள். உங்களின் யோகாதிபதி சந்திரன் இருக்குமிடத்தை வைத்து பணபுழக்கம் இருக்கும். இந்த ஆண்டு கிரக பெயர்ச்சிகள் உங்களின் ராசிக்கு நல்லதல்ல என்றாலும், உங்களின் ராசிநாதனின் பார்வை பெறுமிடம் சிறப்பாக அமையும். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். 
 
அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து, மனவருத்தம் தரும் என்பதால் உறவு பழக்கங்களில் கட்டுபாடு இருப்பது அவசியம். வீடு சம்மந்தமான சில சிக்கல்கள் வந்து வருத்தத்தை தரும் என்பதால், ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வதும் சரி செய்து கொள்வதும் நல்லது. வெளிநாடு பயணம் செய்ய விசா எளிதாக கிடைக்கும். பயணத்தில் சில சிரமம் உண்டாகும். 
 
மிகவும் பொறுமையும், கவனமும் இருந்தால் வரும் துன்பத்தை எளிமையாக்கி கொள்ளலாம். சுற்றத்தாரிடம் அதிகம் பேசுவதைத் தவிர்த்து விட்டு, தேவைக்கு மட்டும் பயன்படுத்தி கொண்டால் எல்லாம் சரியாக நடக்கும். எதையும் முன்கூட்டி யோசித்து செயல்பட்டால் எல்லாம் இன்பமாக மாற்றிக் கொள்ள முடியும். தேவையற்ற சில காரியங்களை தவிர்த்து விடுவது நல்லது.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
ஓரஞ்சு, வெண்மை, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 2, 9.
 
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 முதல் 06.00 மணிக்கு வைரவருக்கு வெண்பூசணியில் நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கியும், வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு நெய் தீபமிட்டு வரவும் நல்ல பலன்களை பெற்று வளம் பெறுவீர்கள்.