சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - துலாம்

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - துலாம்

விவேகமாக எதையும் செயல்படுத்த முயற்சிக்கும் துலாம் ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு இதுவரை அர்தாஷ்டம சனியாக இருந்த சனி பகவான் இனி பஞ்சமஸ்தானத்தில் அமர்வதும் தனஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வளமான வாழ்வுக்கு வழி கிடைக்கும். எதிலும் எதிர்ப்பு நிலைமாறி குடும்பத்தில் இதுவரை தேவையற்ற சச்சரவுகள், விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டு வீம்பு செய்து வந்த நிலைமாறி இனி விட்டு கொடுக்கும் மனநிலைக்கு வருவீர்கள். 
 
உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் யோகாதிபதி சனி என்பதால் உங்களுக்கு அவர் பார்க்கும் இடம் சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். துணிச்சல், தைரியம் நிறைய இருக்கும். உங்களின் கடமையை சரியாக செய்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். திட்டமிட்ட காரியம் சீக்கிரம் நடக்கும். இதுவரை உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவரை தெரிந்து கொண்டு சுதாரித்துக் கொள்வீர்கள். 
 
உங்களின் ராசியை 22.04.2023 முதல் குரு பார்வை பெறுவது இன்றும் சிறப்பான பலனை பெற்றுத் தரும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, வளமான சூழ்நிலை உருவாக்கிக் கொள்வீர்கள். கலைதுறையினருக்கு இதுவரை பல சொல்ல முடியாத இன்னல்களிலிருந்து விடுபட்டு, திறமுடன் செயல்படுவீர்கள். திருமண காரியம் தடைபட்டவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.
 
குறுகிய முதலீடுகள் மூலம் பெரிய லாபம் பெறும் வாய்ப்புகள் அமையும். பல நாள் ஆன்மீக பணி மீது விருப்பம் இருந்தது நிறைவேறும். தடைகள் நீங்கி மீண்டும் செயல்பட துவங்குவீர்கள். நல்ல காரியம் வீட்டில் நடக்கும். பெண் பிள்ளைகள் மனமுதிர்ச்சி அடைவார்கள். தொழிலில் முன்பைவிட சிறப்பாக நல்ல வருமானம் கைகூடி வரும். பொது வாழ்வில் புதிய பொறுப்பு கிடைக்க பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, நீலம், மஞ்சள்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 6, 8.
 
இந்த ஆண்டு நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், வெள்ளிகிழமை அம்மன் வழிபாடும் செய்து, தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள, சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.